முஸ்லீம் நீதிபதிகள் கணக்கெடுப்பு-பாஜக கண்டனம்
டெல்லி:
முஸ்லீம் நீதிபதிகளைக் கணக்கெடுக்க நியமிக்கப்பட்டுள்ள ரஜிந்தர் சச்சார் கமிட்டியை உடனே ரத்து செய்யவேண்டும் என பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,முஸ்லிம்களின் சமூக மற்றும் கல்வி நிலையை அறிந்து கொள்ளும் விதமாக கடந்த ஆண்டு மத்திய அரசு கமிட்டிஅமைத்தது. தற்போது முஸ்லீம் நீதிபதிகள் கணக்கெடுப்பு நடத்த டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிரஜிந்தர் சச்சார் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இது நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லும் கமிட்டியாக அமைந்துள்ளது. நீதித் துறையில் மதவாதத்தைபுகுத்தும் முயற்சி இது. மத்திய அரசு தங்கள் நிலையில் பிடிவாதமாக இருப்பதையே இது வெளிப்படுத்துகிறது.இதை பிரதமர் உடனடியாக இந்த கமிட்டிக்கு முடிவு கட்ட வேண்டும்.
மதத்தின் அடிப்படையில் நீதித் துறையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டால், அது இந்தியாவுக்கு நன்மை பயக்கும்என சச்சார் கமிட்டி நினைக்கிறதா?.
மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய சம்பளக் கமிஷன் அமைக்க பாஜக ஆட்சி நடக்கும் மத்திய பிரதேசம்,குஜராத் அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகக் கூறுவது தவறு. இதனால் ஏற்படும் நிதிச் சுமையை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தான் இரு மாநில அரசும் கோரிக்கை விடுத்துள்ளது என்றார் ஜேட்லி.
யாருக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும்:
இதற்கிடையில் பிற்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு சலுகைகளை ஜனாதிபதி, உச்ச நீதிமன்றம் மற்றும்உயர்நீதிமன்ற நீதிபதிகள் போன்ற உயர்பதவிகளை வகிப்போர் வாரிசுகள் இனி பெற முடியாது என மத்திய அரசுஅறிவித்துள்ளது.
மேலும் ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சத்துக்கு மேல் வருவாய் உள்ளவர்கள், சொத்துரிமை சட்டத்தின் கீழ் குறிப்பிட்டஅளவுக்கு தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளுக்கு சொத்துக்கள் வைத்து இருப்பவர்கள் ஆகியோரும் இனி இதரபிற்படுத்தப்பட்டவர்களாகக் கருதப்படமாட்டார்கள்.
அதே போல பாசன வசதி பெறும் மற்றும் பாசன வசதி பெறாத விவசாய நிலங்களை அரசு நிர்ணயித்துள்ளஅளவுக்கு மேல் வைத்திருப்பவர்களின் குழந்தைகளுக்கும், தோட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின்குழந்தைகளுக்கும் இது பொருந்தும் என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications