இலங்கை டூர்: மீண்டும் சச்சினுக்கு இடம்
டெல்லி:
இலங்கை செல்லும் இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியில் சச்சின் டெண்டுல்கருக்கு இடம்கொடுக்கப்பட்டுள்ளது. நன்றாகப் பந்து வீசும் அணில் கும்ப்ளேவை வழக்கம் போல வெளியேற்றியுள்ளனர்.
![]() |
அவருக்கு நல்ல ஓய்வும் கொடுக்காமல், வலி லேசாக சரியானவுடன் அணியில் சேர்த்து மறுபடியும், மறுபடியும்அவரது தோள் பட்டையை சேதப்படுத்தி வருகிறது இந்திய கிரிக்கெட் வாரியம்.
சமீபத்தில் நடந்த மேற்கு இந்தியத் தொடரில் சச்சின் கலந்து கொள்ளவில்லை. அப்போது அவருக்கு லண்டனில்அறுவைச் சிகிச்சை நடந்தது. அது முடிந்து ஓய்வில் இருந்து வந்த அவர் சமீபத்தில் பயிற்சியை ஆரம்பித்தார்.லண்டனில் நடந்த சில போட்டிககளில் கலந்து கொண்டு சதங்களாக அடித்துத் தள்ளினார்.
இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் உடற் பயிற்சியாளரும் மருத்துவர்களும் அவருக்கு சோதனை நடத்திஉடல் நலம் சிறப்பாக இருப்பதாகவும், இலங்கைத் தொடரில் அவர் விளையாடலாம் சான்றிதழ் கொடுத்தனர்.
இந் நிலையில் நேற்று இலங்கை செல்லும் ஒரு நாள் கிரிக்கெட் அணியின் வீரர்கள் தேர்வு நடந்தது. அதில்தேர்வுக் குழுத் தலைவர் கிரண் மோரே தலைமையிலான தேர்வுக் குழுவினர், கேப்டன் ராகுல் டிராவிட் ஆகியோர்கலந்து கொண்டனர்.
![]() |
சீனியர் வீரரான கும்ப்ளே நீக்கப்பட்டுள்ளார். சமீப காலமாக அவரை ஒரு நாள் போட்டிகளில் சேர்க்காமல்கிரிக்கெட் வாரியம் விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டிகளில் விக்கெட்டுக்களை அள்ளுவதோடு அணிக்குவெற்றியையும் பெற்றுத் தருகிறார் கும்ப்ளே.
ஆனால் அவரை ஒரு நாள் போட்டிகளில் மட்டும் சேர்க்காமல் பிடிவாதமாக உள்ளது கிரிக்கெட் வாரியம்.
ரொம்ப நாட்களாக அணியில் இடம் பெறாமல் இருந்து வந்த திணேஷ் மோங்கியா மீண்டும் திரும்பியுள்ளார்.மற்றபடிமுரளி கார்த்திக், திணேஷ் கார்த்திக் போன்ற தமிழக வீரர்களையும் தேர்வுக்குழு கண்டுகொள்ளவில்லை.வழக்கம்போல மறந்து விட்டது.
இலங்கை செல்லும் இந்திய அணி அங்கு இலங்கை, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் கலந்து கொள்ளும்முத்தரப்பு ஒரு நாள் தொடரில் விளையாடு".
இந்திய அணியின் விவரம்: ராகுல் டிராவிட், வீரேந்திர ஷேவாக், சச்சின் டெண்டுல்கர், முகம்மது கைப், யுவராஜ்சிங், மகேந்திர சிங் தோணி, ஸ்ரீசாந்த், அஜீத் அகர்கர், ரமேஷ் பவார், சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான், முனாப்படேல், தினேஷ் மோங்கியா, ஆர்.பி.சிங், ஹர்பஜன் சிங்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா














Click it and Unblock the Notifications