சிவாஜி சிலை இன்று திறப்பு: ரஜினி, கமல்பங்கேற்பு-சிலைகள் மயமாகும் மெரீனா!
சென்னை:
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை இன்று கடற்கரை காமராஜர் சாலையில் திறந்து வைக்கப்படுகிறது. முதல்வர்கருணாநிதி சிலையைத் திறந்து வைக்கிறார். நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகினர்அனைவரும் பங்கேற்கிறார்கள்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 8 அடி உயர வெண்கச் சிலையை தமிழக அரசு தயாரித்துள்ளது. இந்தச் சிலை,சென்னை மெரீனா கடற்கரை, காமராஜர் சாலை - ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் காந்தி சிலைக்கு எதிரேநிறுவப்பட்டுள்ளது.சிலையை இந்த இடத்தில் வைப்பதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், சிலையை நிறுவத் தடை இல்லை என்றுஉயர்நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து திட்டமிட்டபடி இன்று சிலை திறப்பு நடைபெறுகிறது. இன்று சிவாஜிகணேசனின் நினைவு தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
மாலை 6.30 மணிக்கு முதல்வர் கருணாநிதி சிலையைத் திறந்து வைக்கிறார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள்,எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விக்ரம், விஜய் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.அனைத்து நடிகர், நடிகைகளும் கண்டிப்பாக விழாவுக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்களாம்.
இருப்பினும் விஜயகாந்த், சரத்குமார் மற்றும் அதிமுக நடிகர்கள், நடிகைகள் வருவார்களா என்பது உறுதியாகத்தெரியவில்லை.சிவாஜி கணேசனின் துணைவியார் கமலா அம்மாள், சிவாஜி மறைவுக்குப் பின்னர் எந்த பொதுநிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார்.
இப்போது முதல் முறையாக சிவாஜி சிலை திறப்பு விழாவில் அவர் கலந்து கொள்ளவுள்ளார். நிகழ்ச்சியில்சிவாஜி நடித்த பல வரலாற்றுத் திரைப்படங்களிலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்பும்திரையிடப்பட்டவுள்ளது.
இதற்காக பிரமாண்டத் திரை கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளது. விழா தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்குமுன்பு இந்த தொகுப்பு காட்டப்படவுள்ளது.
சிலைகள் மயமாகும் மெரீனா:
உலகின் 2வது மிகப் பெரிய கடற்கரை என்ற பெருமை பெற்றுள்ள மெரீனா கடற்கரையில், சிலைகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகிறது.
முன்பு திமுக ஆட்சிக்காலத்தில் சென்னையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டையொட்டி பல்வேறு தலைவர்களின் சிலைகள் நிறுவப்பட்டன. எழிலகம் முன்புதொடங்கி, கலங்கரை விளக்கம் வரை இந்த சிலைகள் வரிசையாக நிறுவப்பட்டன.
திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன், கண்ணகி, வீரமாமுனிவர், நேதாஜி, மகாத்மா காந்தி, அவ்வையார், காமராஜர், உழைப்பாளர் சிலை ஆகியவைஇங்குள்ளன. தற்போது 11வது சிலையாக சிவாஜி சிலை இடம் பெறுகிறது.
இதில் கண்ணகி சிலை கடந்த அதிமுக ஆட்சியில் அங்கிருந்து அகற்றப்பட்டு மீண்டும் அதே இடத்தில் சமீபத்தில் நிறுவப்பட்டது.
இதுதவிர அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். ஆகியோரின் சமாதிகளும் இங்குள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications