சென்னையில் அடுக்கு மாடி ரயில் நிலையம்!
டெல்லி:
சென்னை உள்ளிட்ட இந்தியாவின் நான்கு பெருநகரங்களில் ரூ. 16,000 கோடி செலவில் அடுக்கு மாடி ரயில்நிலையங்களை அமைக்க மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் திட்டமிட்டுள்ளார்.
உலகின் மிகப் பெரிய ரயில்வேயாக இந்திய ரயில்வே விளங்குகிறது. அதிக அளவிலான பயணிகளைகையாளும் இந்திய ரயில்வே, மாறி வரும் காலத்திற்கேற்ப அதுவும் பல பழைய விஷயங்களை மாற்றிக் கொண்டுவருகிறது.மெட்ரோ ரயில் எனப்படும் பாதாள ரயில், மாடி ரயில், கொங்கன் ரயில்வேயின் கீழ் தொங்கும் ரயில் என நவீனவசதிகளை இந்திய ரயில்வே அமல்படுத்தி வருகிறது. இந்த வகையில் அடுத்த கட்டமாக ரயில் நிலையங்களைநிவீனப்படுத்த இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.
சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்ற லாலு அங்கு ரயில் திட்டங்களை அவர் ஆய்வு செய்தார். அப்போது,இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் அடுக்கு மாடி ரயில் நிலையங்களைக் கண்டவர் அதை இந்தியாவிலும்அமைக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த ரயில் நிலையங்களில் பல சிறப்பம்சங்கள் உண்டு. அதாவது ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் புறப்படுவதுஒரு தளத்திலும், வெளியிலிருந்து நிலையத்திற்குள் வரும் ரயில்கள் இன்னொரு தளத்திலும் வந்து போகக் கூடியவகையில் இந்த நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு நகரில் இத்திட்டத்தை செயல்படுத்த சுமாராக ரூ. 4,000 கோடி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய பெரு நகரங்களில் இந்த அடுக்கு மாடி ரயில்நிலையங்களை அமைக்க லாலு உத்தேசித்துள்ளார்.
இந்தத் திட்டத்தை ரயில்வே துறை தனியாக மேற்கொள்ளாமல், தனியார் துறையுடன் இணைந்துசெயல்படுத்தினால் செலவைக் குறைக்க முடியும் என்றும் லாலுவுக்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் தொடர்பாக வரும் 26ம் தேதி டெல்லியில் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனைமேற்கொள்ளவுள்ளார் லாலு. முதலில் டெல்லியில் அடுக்கு மாடி ரயில் நிலையம் அமைக்கும் பணிதொடங்கப்படும் எனத் தெரிகிறது.
வரும் 2010ம் டெல்லியில் ஆண்டில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடைபெறவுள்ளது. எனவேடெல்லியை அழகுபடுத்தும் வேலைகள், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள்தொடங்கவுள்ளன.
அத்தோடு சேர்த்து அடுக்கு மாடி ரயில் நிலையத்தையும் அமைக்கலாம் என லாலு யோசனை தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications