சிறுதாவூர் பங்களாவின் உரிமையாளர் யார்? கருணாநிதி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சிறுதாவூர் பங்களாவுக்கு ஜெயலலிதாவோ, சசிகலாவோ உரிமையாளர் இல்லைஎன்றால் உண்மையான உரிமையாளர் யார் என்று முதல்வர் கருணாநிதி கேள்விஎழுப்பியுள்ளார்.

சிறுதாவூர் பங்களா விவகாரம் குறித்து நேற்று ஜெயலலிதா வெளியிட்டஅறிக்கையில், அந்த பங்களா எனக்கோ, சசிகலாவுக்கோ உரிமையானதல்ல. நாங்கள்வாடகைக்குத்தான் அங்கு குடியேறியுள்ளோம் என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து கருணாநிதி பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சிறுதாவூர்விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா, இல்லாத ஒன்றைபிரச்சினையாக்க கருணாநிதி முயலுகிறார் என்று கூறியுள்ளார்.

அந்த இடம் எனக்குச் சொந்தமானதல்ல, சிறுதாவூர் பங்களாவுக்கு நானோ,சசிகலாவோ உரிமையாளர் அல்ல என்றும் கூறியுள்ளார். முதல்வர் பொறுப்பில்இருந்த ஒருவர் இவ்வாறு தனியார் பங்களாவில் வாடகைக்கு சென்று தங்கியிருக்கிறார்என்கிறபோது, நாட்டு மக்களுக்கு சில சந்தேகங்கள் இயல்பாக எழத்தான் செய்யும்.

குறிப்பாக அந்த பங்களாவுக்கு உண்மையான உரிமையாளர் யார்? அவருக்கும்,ஜெயலலிதா, சசிகலாவுக்கும் என்ன தொடர்பு? எந்தப் பத்திரிக்கையில் பங்களாககாலியாக உள்ளதாக விளம்பரப்படுத்தப்பட்டது? அந்த பங்களாவுக்கு வாடகைகொடுத்ததாக ஜெயலலிதா கூறுகிறாரே, அப்படியானால் யார் வாடகை கொடுத்தது?

அரசு கொடுத்ததா இல்லை, ஜெயலலிதா அல்லது சசிகலா கொடுத்தார்களா? வாடகைஎவ்வளவு? வாடகை ரொக்கமாக செலுத்தப்பட்டதா? காசோலையாககொடுக்கப்பட்டதா?

தனியார் பங்களா என்றால் அந்தப் பங்களாவிற்கு சென்னையிலிருந்து செல்லும்சாலை அரசாங்கச் செலவில் கடந்த ஆண்டு பராமரிக்கப்பட்டதும்,மேம்படுத்தப்பட்டதும் எதற்காக? இப்படி அத்தனை விவரங்களையும் நாட்டு மக்கள்ஜெயலலிதாவிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள்.

அதை அவர் தெரிவித்தால் நாட்டு மக்கள் உண்மையை அறிந்து கொள்ள முடியும்.இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாக ஜெயலலிதாகூறியுள்ளார்.

உண்மையில், சட்டப்படி அவர் நடவடிக்கை எடுத்தால்தான் சிறுதாவூர் பிரச்சினைகுறித்த உண்மை நிலை நாட்டுக்குத் தெரியும். எனவே அந்த நாளைத்தான் நாடும்,மக்களும் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+