கடிப்பது எப்படி? திமுகவிடம் கேளுங்கள்-பாஜக
டெல்லி:
இடதுசாரிகளுக்கு கூச்சல் போட மட்டும் தான் தெரியும், கடிக்கத் தெரியாது. இந்தவிஷயத்தில் தமிழக முதல்வர் கருணாநிதியிடம் இடதுசாரி கட்சிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என பாஜக மூத்த தலைவரான வெங்கையா நாயுடு கூறினார்.
ராஜ்யசபாவில் விலைவாசி உயர்வு குறித்த விவாதம் நடந்தது. அப்போதுவெங்கையா நாயுடு பேசியதாவது:நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. விலைவாசிஉயர்வை கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு பெரும் தோல்வி அடைந்துவிட்டது. பிரதமர் இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுத்துவருகிறார்.
இரும்பு, சர்க்கரை ஆகியவற்றின் உற்பத்தி, தேவையை விட அதிகமாக உள்ளது.ஆனாலும், இவற்றின் விலை உயர்ந்து கொண்டுள்ளது.
இது போன்ற விஷயங்களில் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த நண்பர்கள் "கூச்சல்எழுப்புவதையே வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் ஒரு பயனும் இல்லை.
நெய்வேலி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யும் விஷயத்தில் திமுகதலைவர் கருணாநிதி குரல் எழுப்பினார். ஆதரவு வாபஸ் என்று அவர் விடுத்தஎச்சரிக்கையால் பிரதமரும், நிதியமைச்சரும் அந்த முடிவையே வாபஸ் பெற்றனர்.
விலைவாசி உயர்வு விஷயத்தில் கருணாநிதியை உதாரணமாகக் கொண்டு இடதுசாரிகட்சிகள் செயல்பட வேண்டும் என்றார்.
அப்போது எழுந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி, இது போன்றவிஷயங்களில் தேவைப்பட்டால் மத்திய அரசை "கடிக்கவும் தயங்க மாட்டோம்என்றார்.
இதற்கு பதிலளித்த வெங்கையா நாயுடு, நீங்கள் எங்கே கடிக்கிறீர்கள்? வாய் கிழியபேசுவீர்கள். கூச்சல் போடுவீர்கள். காலையில் யெச்சூரி பேசுவார். பகலில் ராஜா,மாலையில் பரதன், அப்புறம் கராத் போன்றவர்கள் பேசுவார்கள்.
கடிப்பது என்றால் பல்லை வைத்து கடிப்பதை கூறவில்லை. மத்திய அரசின்பொறுப்பை உணரச் செய்யும் வகையில் கடிப்பதை கூறுகிறேன். திமுக தலைவர்கருணாநிதி இதற்கு வழி காட்டியுள்ளார். அவரை பின்பற்றுங்கள் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications