இஸ்ரேல் தாக்குதலில் 4 ஐ.நா. பார்வையாளர்கள் பலி-இந்திய முகாமும் தரைமட்டம்!
டெல் அவிவ்
இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் ஐ.நா. சபையைச் சேர்ந்த நான்குபார்வையாளர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு அமெரிக்காவும்,இஸ்ரேலும் வருத்தம் தெரிவித்துள்ளன. இருப்பினும் தாக்குதல் தொடரும் என்றுஇஸ்ரேல் அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக லெபனான் மீது கடும் தாக்குதலை நடத்தி வருகிறதுஇஸ்ரேல். இத் தாக்குதலில் இதுவரை 700 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளனர். தெற்குலெபனானை முற்றிலும் நிாசப்படுத்தி விட்டது இஸ்ரேல். இஸ்ரேல் படைகளுக்குஎதிராக ஹிஸ்புல்லா அமைப்பினரும் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.ராக்கெட்டுகளை வீசி ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இதுவரை அவர்கள் 1000 ராக்கெட்டுகளை வீசி இஸ்ரேல் படைகளைத்தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந் நிலையில் இஸ்ரேல்-தெற்கு லெபனான் எல்லையில் உள்ள கியாம் நகரில்அமைக்கப்பட்டுள்ள ஐ.நா. முகாம் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசித்தாக்குதல் நடத்தின. இதில் நான்கு பார்வையாளர்கள் பலியாயினர். அந்தக் கட்டடம்முற்றிலும் சேதமடைந்தது.
அந்த முகாமில் ஆஸ்திரேலியா, சீனா, கனடா, பின்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தஐ.நா. பார்வையாளர்கள் இருந்தனர். இந்தத் தாக்குதலில் இந்திய
படையினர் அமைத்திருந்த பதுங்கு குழிகளும், முகாமும் தரைமட்டமானது.
மொத்தம் 14 குண்டுகள் இந்த இடத்தில் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவேஇஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நான்கு இந்தியர்கள் காயம்டைந்தனர். இவர்களில்திலீப்குமார் மன்னா என்பவர் தொடர்ந்து மயக்க நிலையில் இருந்து வருகிறார்.
இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் நான்கு ஐ.நா. பார்வையாளர்கள் இறந்தது குறித்துஇஸ்ரேல் வருத்தம் தெரிவித்துள்ளது. இது எதிர்பாராதது. இருப்பினும் தாக்குதல்தொடரும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலுக்கு அமெரிக்காவும்வருத்தம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே அப்பாவிகளைக் கொன்று குவித்து வரும் இஸ்ரேலை கண்டிக்கும்வகையில் அந்த நாட்டிடம் இருந்து ஆயுதங்கள் வாங்குவதை உடனே நிறுத்தவேண்டும் மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இந் நிலையில் இன்று இஸ்ரேல் படைகளுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையே நடந்த பயங்கரசண்டையில் 13 இஸ்ரேல் ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications