கிருஸ்துவர்களுக்கு இட ஒதுக்கீடு-கருணாநிதி உறுதி
சென்னை:
சிறுபான்மையினரான கிருஸ்துவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கிடைக்கச் செய்ய அனைத்துமுயற்சிகளும் எடுப்பேன் என முதல்வர் கருணாநிதி கூறினார்.
தமிழகத்தைச் சேர்ந்த 17 மறை மாவட்டங்களின் கத்தோலிக்க ஆயர்கள் முதல்வர் கருணாநிதியை சந்தித்தனர்.அப்போது, சிறுபான்மையினர் நலத் துறையை உருவாக்கியதற்காகவும் மதமாற்றத் தடை சட்டத்தைநீக்கியதற்காகவும் கிருஸ்துவர்களுக்கும் தனி இட ஒதுக்கீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஅறிவித்ததற்காகவும் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்துப் பேசிய கருணாநிதி,
உங்களை சந்திக்கக் கிடைத்த வாய்ப்புக்காக பெருமை அடைகிறேன். நம் அடுத்த சந்திப்பு உங்களது முக்கியகோரிக்கையான கல்வி, வேலை வாய்ப்புக்களில் இட ஒதுக்கீடு சிறுபான்மையினருக்கும் கிடைத்தது என்றஅறிவிப்புக்குப் பின் நடைபெறுகின்ற சந்திப்பாக இருக்க வேண்டும் என்பது தான் என் ஆசை.
அந்த ஆசை நிறைவேற எல்லா வகையிலும் பாடுபடுவேன் என்பதை உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன்.நீங்கள் என் பாலும், என் தலைமையிலான இயக்கத்தின் பாலும், திமுகவின் ஆட்சியின்பாலும் கொண்டுள்ளஅன்பை, பெருமை வாய்ந்த பாராட்டை நினைத்து மகிழ்கிறேன். இது எவரிடத்திலும் காண முடியாதபேரன்பாகும்.
உங்கள் பேரன்புக்கு நன்றி என்றார்.
மருத்துவமனையில் தயாளு அம்மாள்:
இந் நிலையில் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மருத்துவ பரிசோதனைகளுக்காக போரூர் எஸ்ஆர்எம்சிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு நாட்களாக அவர் மருத்துவமனையிலேயே உள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications