மீனாட்சி அம்மன் கோவிலுக்கு குண்டு மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை மீனாட்சி அம்மன் கோவில், உயர்நீதிமன்றக் கிளை, விமான நிலையம் ஆகியவற்றில் வெடிகுண்டுவெடிக்கும் என வந்த தகவலால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை இரவு மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. அதில், அல் மதானி ஜிந்தாபாத்,மதுரையில் விமான நிலையம், மீனாட்சி அம்மன் கோவில், அரசுக் கட்டடங்கள், உயர்நீதிமன்றக் கிளைஆகியவற்றில் வெடிகுண்டு வெடிக்கும் என எழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து மாநகர காவல்துறை ஆணையர் சிதம்பரச்சாமி உத்தரவின் பேரில் ஆயிரக்கணக்கான போலீஸார்நகர் முழுவதும் தீவிர பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். மிரட்டல் விடுக்கப்பட்ட இடங்களை இரவோடுஇரவாக சோதனையிட்டனர். இதில் குண்டு எதுவும் சிக்கவில்லை.

விமான நிலையம், உயர்நீதிமன்றம், மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டுள்ளது. கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்துல் நாசர் மதானியின் ஆட்கள்தான்இந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்திருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

கடிதம் அனுப்பியவர்களைப் பிடிக்க தீவிர விசாரணை நடந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+