இலங்கை நம் நண்பன் அல்ல-பழ.நெடுமாறன்
பாண்டிச்சேரி:
இலங்கை அகதிகளைப் பராமரிக்கும் பொறுப்பை ஐ.நா. நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று உலகத்தமிழர் பேரவை தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
பாண்டிச்சேரியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கானஅகதிகள் முகாம்களை ஐ. நாவிடம் ஒப்படைக்க வேண்டும். இதன் மூலம் அகதிகளுக்கு தரமான வசதிகள்கிடைக்கும். அவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் சிறந்த முறையில் கிடைக்கும்.இலங்கை அரசுக்கு இந்திய அரசு ரேடார் வசதிகளைக் கொடுத்துள்ளது கவலை அளிக்கிறது. தமிழர்களுக்குஎதிராக பயன்படுத்தவே இந்த ரேடார் கருவிகளை இலங்கை அரசு வாங்கியுள்ளது. இலங்கை விவகாரத்தில்இந்திய அரசு தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். எந்தவிதமான ராணுவ உதவியையும் இலங்கைக்குத்தரக் கூடாது.
தற்போது இலங்கை விவகாரத்தில் நமது அரசுகள் பின்பற்றி வரும் கொள்கை, நேருவின் கொள்கைக்குமுரணானது. இலங்கை அரசு இந்தியாவுக்கு எந்த வகையிலும் அனுசரணையாக இருக்காது.
இதற்கு சிறந்த உதாரணம் கூற வேண்டுமானால், இலங்கையில் உள்ள இந்தியன் ஆயில் கார்பரேஷனுக்குச்சொந்தமான எண்ணெய் கிடங்குகளை அரசே எடுத்துக் கொள்ளும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளதைக்கூறலாம். இலங்கை, இந்தியாவின் நண்பராக இருக்காது என்பதற்கு இது ஒரு உதாரணம்.
உலகத் தமிழர் பேரவை ஆரம்பித்து நான்கு வருடங்கள் ஆகிறது. இதுதொடர்பாக சேலத்தில் ஆகஸ்ட் 12, 13ஆகிய தேதிகளில் சிறப்பு மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து நான்கு தமிழ்எம்.பிக்கள், மலேசியா உள்ளிட நாடுகளிலிருந்து ஏராளமான தமிழர் தலைவர்கள் வருகை தரவுள்ளனர் என்றார்நெடுமாறன்.












Click it and Unblock the Notifications