விபச்சாரிகளுக்கு பிளாட் வாங்கி தந்த தந்திரி: நடிகையுடனும் தொடர்பு
திருவனந்தபுரம்:
விபச்சார அழகிகள் வீட்டில் சிக்கிக் கொண்ட சபரிமலை தந்திரி கண்டரரு மோகனருதன்னை சுற்றி வளைத்த இளைஞர்களிடம் ரூ. 1 கோடி வரை பேரம் பேசியுள்ளார் எனபோலீசார் தெரிவித்துள்ளனர்.
![]() |
கண்டரரு மோகனரு புகாரில் கூறி உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் சுமார் 20வீடுகள் உள்ளன. தந்திரி அடைக்கப்பட்டதாகக் கூறிய அந்த வீட்டில் 2 பெண்கள்மட்டுமே உள்ளனர். இவர்கள் மீது ஏற்கனவே விபச்சார வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு இருக்கின்றன.
குறிப்பிட்ட இந்த வீட்டிற்கு கடந்த 1 ஆண்டில் மட்டும் சுமார் 20 முறைக்கு மேல்தந்திரி சென்று இருக்கிறார். சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் அந்த வீட்டுக்குள் அவர்இருப்பார். அதன் பிறகே வெளியே வருவாராம். நீண்ட நாட்களுக்கு பிறகே, இந்தவீட்டுக்கு வந்து செல்வது சபரிமலை தந்திரி என்பதை அந்த பகுதி இளைஞர்கள்கண்டுபிடித்துள்ளனர்.
இதனால் அவரை பிடிக்க திட்டம் போட்டுள்ளனர். அதன்படி கடந்த 23ம் தேதிவழக்கம் போல் அழகிகளின் வீட்டுக்குள் புகந்த தந்திரியை இளைஞர்கள் சுற்றிவளைத்து பிடித்திருக்கின்றனர். அந்த பெண்களுடன் தந்திரி நெருக்கமாக இருப்பதைபுகைப்படமும் எடுத்துள்ளனர்.
இளைஞர்களிடம் சிக்கியவுடன் தந்திரி வெளியே ஓடி வந்திருக்கிறார். ஆனால்,இளைஞர்கள் அவரை விடவில்லை. பின்னர் அவர்களிடம் போட்டோவை கேட்டுகொஞ்சி இருக்கிறார்.
போட்டோவையும், தான் அழகிகள் வீட்டுக்கு வந்ததை மறைக்கவும் பண பேரமும்பேசியுள்ளார் தந்திரி. ரூ. 1 கோடி வரை தருவதாகக் கூறி, அங்கிருந்து அவர் கிளம்பிவந்திருக்கிறார். அந்த அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளிக்கு தந்திரியை நன்றாகத்தெரிந்திருக்கிறது.
அடுக்குமாடி வாசலில் வைக்கப்பட்டு இருக்கும் அந்த வருகை பதிவோட்டில்குறிப்பிட்ட அந்த வீட்டிற்கு செல்வதாக தந்திரி எழுதி இருக்கிறார். இதற்கானஆதராங்கள் அனைத்தும் தற்போது போலீசிடம் உள்ளன.
இதன் அடிப்படையில் தான் தந்திரியுடம் விசாரணை நடத்தப்பட்டது என போலீஸ்வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையில் விபசார அழகிகளுக்கு அந்த இடத்தில் பிளாட் வாங்கிகொடுத்துள்ளார் தந்திரி. பிளாட்டின் உரிமையாளரான பெண்ணுக்கும், தந்திரிக்கும்ஏற்கனவே நெருக்கிய தொடர்பு உண்டு.
அந்த தொடர்பை வைத்து, பல நல்ல குடும்பங்கள் வசித்து வரும் அந்த அடுக்குமாடிகுடியிருப்பில் விபச்சாரிகளுக்கு பிளாட் வாங்கி கொடுதிருக்கிறார் தந்திரி.
தந்திரி வரும் நாட்களில் வேறு எந்த நபர்களையும் அந்த பெண்கள் அனுமதிக்கமாட்டார்களாம். மேலும் சபரிமலை பிரசாதத்தையும் அந்த பெண்களுக்கு தந்திரிகொண்டு வந்து கொடுத்துள்ளார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கணவரை இழந்த அழகிக்கு உதவினேன்:
நேற்று இரவும் தந்திரி மோகனருவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போதுதந்திரி கூறியதாவது,
லிங் லெஷ்மணன் பிளாட்டில் உள்ள சாந்தா என்ற பெண்ணை எனக்கு ஏற்கனவேதெரியும். சாந்தாவின் கணவர் பிரகாசன் எனது நெருங்கிய நண்பர். சில மாதத்துக்குமுன்னர் தான் இவர் இறந்து போனார்.
பிரகாசன் மறைவுக்கு பின் சாந்தாவுக்கு சில உதவிகள் செய்து வந்தேன். பாலாரிவட்டத்தில் உள்ள எனது வீட்டுக்கு வேலை பார்க்க ஒரு சிறுவன் வேண்டும் என நான்சாந்தாவிடம் கூறியிருந்தேன். அது பற்றி விசாரிக்கதான் நான் அந்த வீட்டுக்கு சென்றுசாந்தாவிடம் பேசிக்கொண்டு இருந்தேன்.
அப்போது சில இளைஞர்கள் பிளாட்டிற்கு திடீரென புகுந்து சாந்தாவை மிரட்டி,அவளை நிர்வாணமாக்கி என் பக்கத்தில் நிறுத்தி போட்டோ எடுத்தனர். அப்போதுஅந்த பிளாட்டுக்கு சொந்தக்காரரான ஷோபா என்ற பெண்ணும் (இவரும் விபச்சாரப்பெண் ஆவார்) உடனிருந்தார் என அவர் கூறியுள்ளார் மோகனரு.
நடிகைகளுடனும் தொடர்பு:
இதற்கிடையே மோகனருவுக்கு பிரபல நடிகையுடனும் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்குப் படங்களில் நடித்த அவர், டிவிசீரியல்களிலும் தலை காட்டியவர் ஆவார். இயக்குனர் சிகரத்தின் படத்தில் நடித்து அவர் முன்னணிக்கு வந்தார்.
சென்னையில் உள்ள ஐயப்பன் கோவிலில் பணியாற்றியபோது இந்த நடிகையுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவரத்தை கோவில் நிர்வாகிகள்கண்டுபிடித்து கேரளாவில் உள்ள கோவில் நிர்வாகிகளுக்குத் தெரியப்படுத்த, அதை அப்படியே மூடி மறைத்துள்ள விவரமும் இப்போது தெரிய வந்துள்ளது.
உளவுத்துறை விசாரணை:
இதற்கிடையே தந்திரி கண்டரரு மோகனரு விவகாரம் குறித்து உளவுத்துறை ஏடிஜிபி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் ஏரிபாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications