அரசின் டி பிரிவு வேலை தனியார்மயமாகிறது!!
சென்னை:
தமிழக அரசின் டி பிரிவு ஊழியர்களை நியமிக்கும் பொறுப்பை தனியாரிடம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும், இந்தப் பணியிடங்களை காண்ட்ராக்ட் அடிப்படையில்நிரப்பவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம், ஆசிரியர்தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பூர்த்திசெய்யப்பட்டு வருகின்றன.இதில் டி பிரிவு என அழைக்கப்படும் கடை நிலை பணிகளான கிளீனர், தோட்டக்காரர், அலுவலகஉதவியாளர்கள், துப்புறவாளர, காவலாளி உள்ளிட்ட 44 பிரிவு ஊழியர்கள் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம்தான் இதுவரை நியமிக்கப்பட்டு வந்தனர்.
இனி இந்தப் பணியிடங்களை நிரப்பும் பொறுப்பு தற்போது தனியாரிடம் போகிறது.
சமீபத்தில் அரசுப் பணிகளில் ஊழியர்கள் நியமனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி தமிழக அரசுஉத்தரவிட்டது. அப்போது எந்தப் பணியிடங்களுக்கு எப்படி தேர்வு நடத்த வேண்டும் என்று அரசு ஆணைஒன்றில் தெளிவாக குறிப்பிட்டுளளது.
இதன்படி டி பிரிவு அரசுப் பணியிடங்களை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் தனியார் ஒப்பந்த குழுமம் மூலம்பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் இதனை படிப்படியாக அனைத்து துறைகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசில் அனைத்து துறைகளிலும் டி பிரிவு பணியாளர்கள் சுமார் 1.48 லட்சம் பேர் பணியாற்றிவருகின்றனர். இதில் பெரும்பாலான இடங்கள் காலியாகவே உள்ளன. இந்த இடங்களுக்கு ஆட்களை தேர்வுசெய்தால் அரசுக்கு பெரும் செலவாகும் என்பதால் அவை காலியாக விடப்பட்டுள்ளன.
இந் நிலையில், தனியார் அலுவலகங்களில் ஆபிஸ் பாய்ஸ் நியமிக்கப்படுவது போல அரசுத் துறைகளில்பியூன்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்களை நிரப்பும் பணியை தனியார் நிறுவனங்களிடம் வழங்க தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால் இவர்கள் அரசு ஊழியர்களாக இருக்க மாட்டார்கள். காண்ட்ராக்ட் அடிப்படையில் வேலைபார்ப்பார்கள்.
அரசின் இந்த உத்தரவால் டி பிரிவு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு அரசுஅலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் கே.கணேசன்கூறியதாவது,
அரசின் இந்த உத்தரவுபடி டி பிரிவு பணிகள் அனைத்தும் படிப்படியாக தனியாரிடம் ஒப்படைக்க கூடியசூழ்நிலை உருவாகி உள்ளது. மேலும் இதனால் வறுமைகோட்டிற்கு கீழ்வாழும் மக்களின் குழந்தைகள் எதிர்காலம்கோள்விக் குறியாகும்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் அரசு வேலைஎன்ற கனவு அடியோடு அழிந்து போகக் கூடிய நிலை உருவாகி உள்ளது.
எனவே டி பிரிவு பணியாளர்கள் நியமனம் தொடர்பான புதிய உத்தரவை ரத்து செய்து பழையபடிவேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பூர்த்தி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக தலைமை செயலாளரை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். அரசு ஊழியர்களுக்கு பல்வேறுசலுகைகளை வழங்கிய முதல்வர் இதையும் கருத்தில் கொண்டு உதவ வேண்டும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications