கள்ளுக் கடைகளைத் திறக்க மதிமுக கோரிக்கை
சென்னை:
தமிழகத்தில் மீண்டும் கள்ளுக் கடைகளைத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சட்டசபையில் மதிமுக எம்எல்ஏ கண்ணப்பன் கோரிக்கை விடுத்தார்.
பட்ஜெட் மீதான விவாதத்தில்கலந்து கொண்டு கண்ணப்பன் பேசுகையில்,கள்ளை விட அதிக போதை தரும் வெளிநாட்டு மது வகைகள் சட்டப்பூர்வமாகவிற்கப்படுகிறது. இந்த வெளிநாட்டு மது வகைகளை உற்பத்தி செய்யும் பெரும்முதலாளிகள், இந்திய அரசியலிலும், மாநில அரசியலிலும் தலையிட்டு எதையும்சாதித்துக் கொள்ள முடிகிறது.
ஆனால் கள் இறக்குபவர்கள், விற்பவர்கள், அதை குடிப்பவர்கள் அனைவருமேஏழைகள் என்பதால் இவர்களால் அரசு நிர்வாகத்தில் தலையிட்டு ஆட்டிப் படைக்கமுடியாது.
தமிழகத்தில் 5 கோடி தென்னை மரங்கள் உள்ளன. தென்னை விவசாயிகள் சமீபகாலமாக தென்னை மரங்களைத் தாக்கும் சிலந்தி நோயால் வருமானக் குறைவுஏற்பட்டு மிகவும் கஷ்டப்படுகின்றனர்.
தென்னை, பனை ஏறும் தொழிலில் ஐந்து லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.கள்ளச் சாராயத்தை ஒழிக்கவும், தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்குமதிசெய்து விற்பனை செயயவும் அரசு முடிவெடுக்க வேண்டும்.
தமிழகத்திற்கு அருகாமையில் உள்ள காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான கேரளா,புதுவையில் கள் இறக்க அனுமதி இருப்பதால் தமிழகத்திலும் இதை அனுமதிக்கவேண்டும் என்றார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications