சமத்துவபுரத்தில் வசிக்கும் அய்யர், ஐயங்கார்கள் திமுகவினரா?: ஸ்டாலின்
சென்னை:
சமத்துவபுரத்தில் இருப்பவர்கள் அனைவருமே திமுகவினர் தான் என்பதால் தான்அங்குள்ளவர்களுக்கு முதலில் இலவச கலர் டிவி வழங்கப்படவுள்ளதாக அதிமுககுற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக சட்டசபையில் பட்ஜெட் மீது நடந்த விவாத விவரம்:அருள்மொழி தேவன் (அதிமுக): தேர்தல் நேரத்தில் திமுக வெளியிட்ட தேர்தல்அறிக்கையில், அனைவருக்கும் கலர் "டிவி தரப்படும் என்று அறிவித்தீர்கள். 21 இன்ச்டிவி தருவதாக விளம்பரமும் செய்தீர்கள். ஆனால், இப்போது 14 இன்ச் டிவி தான்தரப் போவதாக பொதுமக்கள் பேசிக் கொள்கிறார்கள்.
அதுவும் சமத்துவபுரத்தில் இருப்பவர்களுக்குத் தான் முதலில் இலவச டிவி தரப்படும்என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமத்துவபுரத்தில் இருப்பவர்கள் அனைவருமேதிமுகவினர் தான். இதனால் தான் அங்குள்ளவர்களுக்கு முதலில் டிவி தருகிறார்கள்.
சமத்துவபுரத்திற்கு டிவி வழங்கப்படும் என்று கூறுவதற்கு பதிலாக திமுக உறுப்பினர்அட்டை வைத்திருப்பவர்களுக்குத் தான் கலர் டிவி என்று அறிவித்திருந்தால் ரொம்பப்பொருத்தமாக இருந்திருக்கும் என்றார்.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி: சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள் திமுக அமைச்சர்கள்தலையிட்டு ஒதுக்கியவை அல்ல. மாவட்ட கலெக்டர்கள் பரிந்துரை செய்ததின் பேரில்ஒதுக்கப்பட்ட வீடுகள்.
அதிமுக ஆட்சியில் தான் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு வெள்ள நிவாரணம்என்ற பெயரில் வீட்டுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது. திமுகஆட்சியில் அது போல எதுவும் செய்யவில்லை.
அருள்மொழி தேவன்: அதிமுக ஆட்சியில் தமிழகம் மின்வெட்டு இல்லாத மாநிலமாகஇருந்தது. ஆனால், இப்போது அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுவருகிறது.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரமும் காலை 6 மணி முதல் 12 மணிவரை தான் கொடுக்கப்படுகிறது. எங்கள் ஆட்சியில் 24 மணி நேரமும் இலவசமின்சாரம் வழங்கப்பட்டது.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி: அதிமுக ஆட்சியில் 24 மணி நேரமும் விவசாயிகள்பம்பு செட்டு இயக்க அனுமதி அளிக்கப்பட்டதா என்று முன்னாள் மின்துறைஅமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும். அந்த அமைச்சரும் இங்கேதான்அமர்ந்திருக்கிறார். அவர் பேசிய அனைத்தும் சபை குறிப்பில் உள்ளது. உறுப்பினர்கள்இங்கே பேசும் போது கற்பனையாக பேசக்கூடாது.
அமைச்சர் ஸ்டாலின்: சமத்துவபுரத்தில் திமுகவினர் தான் இருக்கின்றனர் என்றுஉறுப்பினர் பேசினார். அங்கு வீடுகள் ஒதுக்கும் போது மாவட்ட கலெக்டர், வருவாய்துறை அதிகாரி, ஆதி திராவிட நல அதிகாரி கொண்ட குழு அமைக்கப்பட்டு,விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.
அதை ஆய்வு செய்து, வெளிப்படையான முறையில் தான் வீடுகள் ஒதுக்கப்பட்டன.சமத்துவபுரத்தில் உள்ள அய்யர் மற்றும் ஐயங்கார் வகுப்பினரும் திமுகவினரா? அங்குஅதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் இருக்கின்றனர். கட்சிக்குஅப்பாற்பட்டவர்களும் உள்ளனர் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications