தாவூத் இப்ராகிமின் வணிக வளாகம் இடிப்பு!
மும்பை:
தாதா தாவூத் இப்ராகிமுக்குச் சொந்தமான வணிக வளாகத்தை இடிக்கும் பணியைமும்பை மாநகராட்சி தொடஙகியுள்ளது.
தெற்கு மும்பையில், கிராப்போர்ட் மார்க்கெட் பகுதியில் தாவூத் இப்ராகிக்குச்சொந்தமான இரண்டு வணிக வளாகங்கள் உள்ளன. சாரா சஹாரா என்றுபெயரிடப்பட்ட இந்த வணிக வளாகங்களை தாவூத்தின் நெருங்கிய கூட்டாளியானஅப்துல் சத்தார் என்பவர் கடந்த 2001ம் ஆண்டு கட்டினார்.மத்திய அரசின் பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான இடத்தில் இந்த கட்டடம்கட்டப்பட்டிருந்ததால், இதுதொடர்பாக மகாராஷ்டிர மாநில அரசு வழக்குதொடர்ந்தது. இந்த வழக்கில் கட்டடம் கட்ட அனுமதி கொடுத்த நான்கு மும்பைமாநகராட்சி பொறியாளர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கட்டடத்தை இடிக்க அனுமதி கோரி மும்பை நீதிமன்றத்தில் மாநகராட்சிசார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்ற மும்பை நீதிமன்றம் கட்டடத்தைஇடிக்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து அப்துல் சத்தார் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடுசெய்யப்பட்டது. இடிக்கும் பணிக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றுசத்தார் தரப்பு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது. இடிக்கும் பணியை தொடங்கலாம் எனவும் அனுமதித்தது. இதையடுத்து,இன்று காலை வணிக வளாகங்களை இடிக்கும் பணி தொடங்கியது.
இந்த வணிக வளாகத்தில் 350 கடைகள் மற்றும் கிட்டங்கிகள் உள்ளன. பலத்தபோலீஸ் பாதுகாப்புடன் இந்த வளாகத்தை இடிக்கும் பணியில் மும்பை மாநகராட்சிஅதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மும்பை குண்டு வெடிப்புக்குப் பின் பாகிஸ்தானுக்கு தப்பிவிட்ட தாவூதின் பலசொத்துக்கள் அரசால் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆனால், அவற்றை ஏலம் விட்டால் அதை வாங்க யாரும் முன் வருவதில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications