முட்டைகள்: பண்ணையாளர்களுக்கு அரசு எச்சரிக்கை
சென்னை:
சத்துணவுத் திட்டத்தின் கீழ் பள்ளிக் கூடங்களுக்கு அழுகிய முட்டைகளைக்கொடுத்தால் சம்பந்தப்பட்ட கோழிப் பண்ணையாளர்கள் மீதுகடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக பள்ளிக் கூடங்களில்தற்போது வாரம் இருமுறை சத்துணவுடன் முட்டையும்வழங்கப்படுகிறது. இந்த முட்டைகள் பெரும்பாலும் அழுகிய முட்டைகளாகஇருப்பதால் தமிழகத்தில் ஆங்காங்கே நூற்றுக்கணக்கான மாணவர்கள்பாதிக்கப்பட்டுள்ளனர்.தினசரி ஏதாவது ஒரு ஊரில் அழுய முட்டைகளை சாப்பிட்டு நூற்றுக்கணக்கானமாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வரும் அவல நிலைஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சியில்ஆழ்ந்துள்ளனர். தங்களதுபிள்ளைகளை பள்ளியில் தரும் முட்டைகளை சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தஆரம்பித்துள்ளனர்.
இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது. முதலில் முட்டைகளால்என்ன பிரச்சினை என்பது குறித்து அரசு விசாரணை மேற்கொண்டது. குளிர்பதனக்கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்த முட்டைகள் பள்ளிக் கூடங்களுக்குவழங்கப்பட்டதால் தான் முட்டைகள் அழுகி மாணவர்களுக்கு பாதிப்பைஏற்படுத்தியது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து குளிர்பதனக் கிடங்குகளில் வைத்திருக்கும் பழைய முட்டைகளைபள்ளிக் கூடங்களுக்கு வழங்கக் கூடாது. அப்படி வழங்கும் பண்ணையாளர்கள் மீதுகடும் நடவடிக்கை எடுக்கப்படும். புதிய முட்டைகளை மட்டுமே வழங்க வேண்டும்.இதை மீறி நடந்தால், பள்ளிக் கூடங்களுக்கான முட்டைகள் ஏலத்தில் பங்கேற்க தடைவிதிக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
இதற்கிடையே முட்டைகளுக்கான வண்ண முத்திரையில் அரசு மாற்றம் செய்துள்ளது.அதன்படி, மாதத்தின் முதல் வாரம், திங்கள்கிழமைகளில் பச்சை நிற அரசுமுத்திரையும், புதன்கிழமை சிவப்பு முத்திரையும் பொறிக்கப்படும்.
2வது வாரத்தில் திங்கள்கிழமை கருப்பு, புதன்கிழமை நீலம், 3வது வாரத்தில்திங்கள்கிழமை பழுப்பு, புதன்கிழமை மஞ்சள், 4வது வாரத்தில், திங்கள்கிழமை ஊதா,புதன்கிழமை ஆரஞ்சு வண்ண முத்திரை பதிக்கப்படும். ஒரு மாதத்தில் 5வது வாரம்வந்தால், திங்கள்கிழமை கருப்பு, புதன்கிழமை நீல நிறத்தில் முத்திரை பதிக்கப்படும்என அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications