ஏட்டுக்கள் கட்டிப் புரண்டு சண்டை: வயர்லெஸ்சில் லைவ்-ரிலே!
சென்னை:
சென்னை அருகே மாங்காடு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் இரண்டு தலைமைக் காவலர்கள் கோணிஊசியால் மாறிமாறி குத்திக் கொண்டு கட்டிப் புரண்டு சண்டை போட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மாங்காடு காவல் நிலையத்தில் தலைமைக் காவலர்களாக இருப்பவர்கள் ரங்கராஜன் மற்றும் ராஜா. இதில்ரங்கராஜன் ஜீப் டிரைவராக பணியாற்றி வருகிறார். ராஜா குற்றப் பிரிவில் பணியாற்றி வருகிறார்.ஒரு வழக்கு தொடர்பாக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கடுமையாக வாக்குவாதம் செய்தஇருவரும் திடீரென கட்டிப் புரண்டு சண்டை போட ஆரம்பித்தனர்.
அதிர்ந்து போன மற்ற காவலர்கள் அவர்களை பிரித்து விட கடுமையாக முயன்றனர். ஆனால் முடியவில்லை.வெறும் கையால் அடித்துக் கொண்டிருந்த ராஜா திடீரென சேரை தூக்கி ரங்கராஜன் மீது வீசி எறிந்து தாக்கினார்.இதில், ரங்கராஜன் காயமடைந்தார்.
வலி தாங்க முடியாமல் அலறிய ரங்கராஜன், சாக்குப் பையை தைக்கும் கோணி ஊசியை எடுத்து ராஜாவைசரமாரியாகக் குத்தினார். இதில் ராஜாவுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது.
ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டே இடையிடையே வயர்லெஸ் அருகே சென்று மைக்கில் ஒருவர் மீதுஒருவர் கடுமையாக குற்றம் சாட்டிக் கொண்டனர். இதனால் வயர்லெஸ்சில் இவர்களது சண்டை லைவ் ரிலேஆனது.
சார் இவன் என்னை அடிக்கிறான், இல்லை இவன் தான் என்னை குத்துறான் என்று வயர்லெஸ்சில் புகார்கூறியபடியே சண்டை போட்டனர்.
வாக்குவாதமும், அடிதடியும் நேரடியாக தங்களது வயர்லெஸ்களில் ஒலிபரப்பாக, அதைக் கேட்ட மாநகர காவல்துறையின் பிற அதிகாரிகளும் போலீசாரும் அதிர்ச்சியடைந்தனர்.
வயர்லெஸ்சில் இந்த சண்டையைக் கேட்ட இன்ஸ்பெக்டர் முருகேசன் விரைந்து வந்து இருவரையும்விலக்கிவிட்டார். இருவரிடமும் துறைரீதியில் விசாரணை நடந்து வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications