3 பள்ளி மாணவிகளை கடத்த முயன்ற வாலிபர்
சேலம்:
பெற்றோருக்கு பயந்து தர்மபுரியிலிருந்து ரயில் ஏறி சேலத்துக்கு வந்த மூன்று பள்ளிமாணவிகளை சென்னைக்கு அழைத்து செல்வதாக கூறி கடத்த முயன்றவர்பிடிபட்டார்.
தர்மபுரி மாவட்டம் பொம்மிடியை சேர்ந்தவர்கள் வைத்தீஸ்வரி (13), தீபா (13),சுகன்யா (12). மூவரும் தோழிகள். இவர்கள் கடந்த இரு நாட்களுக்கு முன் பள்ளிமுடிந்து வீட்டுக்குத் திரும்பும் வழியில் ஒரு தோட்டத்தில் கிழங்கு பறித்துசாப்பிட்டுள்ளனர்.அப்போது அங்கிருந்த தோட்டக்காரர் மாணவியர் மூவரையும் மிரட்டி அடித்ததோடு,பெற்றோரிடம் சொல்வதாகவும் மிரட்டியுள்ளார். வீட்டில் அடி, உதை கிடைக்கும்என்று பயந்த மூன்று பேரும் ரயில் ஏறி சேலம் ரயில் நிலையம் வந்திறங்கினர்.
இவர்கள் தனியே அங்கே சுற்றியதை அறிந்த ஐயப்பன் என்கிற மோண்டி என்றவாலிபர், இவர்களை சென்னைக்கு அழைத்து செல்வதாகக் கூறியுள்ளார்.
இரவு தான் ரயில் வரும் என்பதால் மூன்று பேரையும் கூட்டிக் கொண்டு சேலத்தைசுற்றினார். செவ்வாய்பேட்டை லாரி மார்க்கெட் அருகே ரோந்து பணியில்ஈடுபட்டிருந்த போலீஸார் மூன்று மாணவியரையும் மற்றும் ஐயப்பனையும் பிடித்துவிசாரணை நடத்தினர்.
அப்போது ஐயப்பன் ஊளறினார். இதையடுத்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குஅவர்களை அழைத்து சென்றனர். அங்கு ஐயப்பனுக்கு போலீசார் நடத்திய ஸ்பெஷல்கவனிப்பில் மூன்று மாணவிகளையும் சென்னைக்கு கடத்த முயன்றதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மூன்று மாணவிகளையும் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தி பெற்றோரிடம் ஒப்படைக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications