சட்டசபை: ஜெ அட்டாக் கேள்விகள்- திமுக அதிரடி பதில்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா சுமார் 2 மணி நேரம் பேசினார்.அவர் எழுப்பிய தடாலடி கேள்விகளுக்கும், விமர்சனங்களுக்கும் திமுக தரப்புஅதிரடியாக பதில் கொடுத்தது.

நேற்று காலை 9.55 மணிக்கு சட்டசபைக்கு வந்தார் ஜெயலலிதா. அவரது தோழிசசிகலாவும், எம்.பி. தினகரனும் சட்டசபைக்கு ஜெயலலிதாவின் இருக்கைக்கு நேர்எதிரே மேலே உள்ள பார்வையாளர் மாடத்தில் அமர்ந்தபடி ஜெயலலிதாவின் பேச்சைரசிக்க காத்திருந்தனர்.

சரியாக 11.07 மணிக்கு தனது பேச்சை ஆரம்பித்தார் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 2ஏக்கர் நிலம், ரேஷன் அரிசி, இலவச டிவி என திமுக அரசின் பல்வேறு திட்டங்களைகடுமையாக விமர்சித்துப் பேசினார் ஜெயலலிதா.

ஒரு கட்டத்தில் அவர் கூறுகையில், கடந்த ஆட்சியில் ஒரு தாய் தனது குழந்தைக்குகசப்பு மருந்து கொடுப்பது போல, நிதி நிலையை கருததில் கொண்டு சில கசப்புமருந்துகளை அரசு ஊழியர்களுக்குக் கொடுத்தேன்.

ஆனால் கசப்பு மருந்து கொடுத்த தாயிடம் குழந்தை கோபப்படுவதுபோல என் மீதுகோபம் கொண்ட அரசு ஊழியர்கள் திமுகவுக்கு ஓடடுப் போட்டு விட்டார்கள்.

மேலும் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 30, 40 ஓட்டுக்களை திமுகவுக்கு போடவைத்துவிட்டனர் அரசு ஊழியர்கள் என்றார்.

அப்போது குறுக்கிட்ட அமைச்சர்அன்பழகன், அது தாய்மடி அல்ல, பேய் மடிஎன்பதை தெரிந்து கொண்டு தான் அங்கிருந்து ஓடிவிட்டனர் அரசு ஊழியர்கள். அதேபோல அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது மருந்து அல்ல, விஷம் என்பதையும்அவர்கள் உணர்ந்து கொண்டனர்.

வாக்குச் சாவடிகளில் பணியில் இருந்த அரசு ஊழியர்கள் 30, 40 வாக்குகளைதிமுகவுக்கு சாதகமாக போட்டுவிட்டனர் என்று ஜெயலலிதா கூறுகிறார். இதைவிடஅரசு ஊழியர்களை யாரும் கேவலப்படுத்த முடியாது. இதற்கு அவர்கள் தக்க பதிலடிதருவார்கள் என்றார் அன்பழகன்.

தொடர்ந்து பேசிய ஜெயலலிதா, வித்தை காட்டி, கிலுகிலுப்பை காட்டி ஏமாற்றிச்சென்ற கெட்ட மாமாவிடம் இருந்து உண்மையை உணர்ந்து, மீண்டும் தாயிடம்திரும்புவார்கள் அரசு ஊழியர்கள் என்றார்.

ஒருகட்டத்தில், உணவுத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு ஜெயலலிதா பேச்சின்போதுகுறுக்கிட்டார். அதற்கு ஜெயலலிதா, பெண் அதிகாரியின் அழகை வர்ணித்துப்பேசியவர்கள் எல்லாம், நான் பேச கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுவதை நாடுதாங்காது என்று கோபமாக கூறினார்.

அரசிடம் 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் இல்லை, ஆனால் 50 லட்சம் ஏக்கரை ஏழைகளுக்குத் தருவோம் என்றுகூறியுள்ளீர்கள். எப்படித் தரப் போகிறீர்கள் என ஜெயலலிதா கேட்க, இதற்கு பதிலளித்த முதல்வர் கருணாநிதி,உங்கள் ஆட்சியில் தான் 50 லட்சம் ஏக்கர் நிலம் இருப்பதாக புள்ளி விவரம் தந்தீர்கள், எவ்வளவு நிலம்இருக்கிறதோ அதை ஏழைகளுக்கு பங்கிட்டுத் தருவோம். பணக்காரர்களுக்குத் தர மாட்டோம் என்றார்.

இதையடுத்துப் பேசிய ஜெயலலிதா, இதன்மூலம் உங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டீர்கள். தோல்வியைஏற்று அமெரிக்காவுக்கு ஓடிப் போகப் போகிறீர்களா என்று ஜெயலலிதா கேட்க அமைச்சர் ஆற்காடு வீராசாமிபதிலடி தந்து ஜெயலலிதாவை திக்குமுக்காட வைத்தார்.

ஆற்காடு பேசுகையில், அமெரிக்காவுக்கு ஓட திட்டமிட்டது யார் என்று மக்களுக்குத் தெரியும். அமெரிக்காவிலும்லண்டனிலும் சொத்து யாருக்கு உள்ளது என்ற வழக்கு பக்கத்து மாநிலத்தில் விசாரணையில் உள்ளது.கருணாநிதிக்கு பக்கத்து மாநிலத்தில் கூட சொத்து இல்லை என அன்பழகன் போட்டுத் தாக்க பதில் சொல்லமுடியாமல் தடுமாறினார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் பேச்சின்போது அமைச்சர்கள் பலர்அடிக்கடி குறுக்கிட்டுப் பேசினர்.இருந்தாலும் சளைக்காமல் தான் பேச வந்ததை ஜெயலலிதா பேசிவிட்டுத்தான்பிற்பகல் 1.13க்கு பேச்சை முடித்தார்.

அதன் பின்னர் அவர் புறப்பட்டுச் சென்று விட்டார். தரிசு நிலம் தொடர்பாக முதல்வர்கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையே நேருக்கு நேர் விவாதமும் நடந்துஅவைக் கூட்டத்தை மேலும் விறுவிறுப்பாக்கியது.

ஜெயலலிதாவின் பேச்சில்முதல்வர் கருணாநிதி நான்குமுறை குறுக்கிட்டு விளக்கம்அளித்தார். மொத்தத்தில், நீண்ட இடைவேளைக்குப் பிறகு நேற்றுதான், முதல்வர்,எதிர்க்கட்சித் தலைவர், அவை முன்னவர், அமைச்சர்கள், ஆளுங்கட்சியினர்,எதிர்க்கட்சியினர் என அனைத்துத் தரப்பினரும் கலந்து கொண்டுஆக்கப்பூர்வமாகவும், அடிதடி இல்லாமல் விவாதம் நடத்தினர்.

இந்த விவாதத்தின்போது அமைச்சர் பரிதி இளம்வழுதி குறிக்கிட்டு, எல்லை மீறியபயங்கரவாதம் போல இன்று சட்டசபையில் எல்லை மீறிய ஜனநாயகம் பூத்துக்குலுங்குகிறது என்றார்.

இதைக் கேட்டு கருணாநிதி, அமைச்சர்கள், ஜெயலலிதா, நிருபர்கள் உள்படஅனைவரும் சிரித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+