ஜார்க்கண்ட் மாநில தலைமை நீதிபதியாகிறார் கற்பகவிநாயகம்
டெல்லி:
பல்வேறு வழக்குகளில் மிக வித்தியாசமான தீர்ப்புகளை வழங்கி பொது மக்களின்பெரும் அன்பைப் பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம். கற்பக விநாயகம்,தலைமை நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அவரை நியமிக்க உச்ச நீதிமன்றம்மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பல முக்கிய வழக்குகளில் அதிரடியாகதீர்ப்பளித்தவர் கற்பக விநாயகம்.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரின் குடும்பம் மீதுதொடரப்பட்ட வரதட்சணைக் கொடுமை வழக்கில் அவர் அளித்த தீர்ப்பு பெரும்வரவேற்பைப் பெற்றது.
அமெரிக்காவில் வசித்த துணை வேந்தரின் மகன் மற்றும் அவரது மனைவியைநீதிமன்றத்திற்கு வரவழைத்து, அவர்களுடன் பேசி, அவர்களுக்கு மீண்டும்முறைப்படி திருமணம் நடத்தக் கூறி, இருவரையும் சில நாட்கள் ஹோட்டலில் தங்கிமனம் விட்டுப் பேசுமாறு அறிவுரை கூறி, குடும்பத்தை சேர்த்து வைத்தவர் கற்பகவிநாயகம்.
இப்போது திமுகவில் உள்ள எம்எல்ஏவான புரசை ரங்கநாதன் மீதான மோசடிவழக்கில், அவரை மதுரை காந்தி மியூசியத்துக்கு அனுப்பி காந்தியடிகளின்சத்தியசோதனையை படிக்க வைத்தவர் கற்பக விநாயகம்.
இது தவிர மேலும் பல சிறப்பு வாய்ந்த தீர்ப்புகளையும் அவர் தந்துள்ளார்.
அதே நேரம் சில அரசியல் சார்ந்த வழக்குகளில் அவரை தேவையில்லாமல்சர்ச்சைகளிலும் மாட்ட வைத்தனர்.
இந் நிலையில் கற்பக விநாயகம் தலைமை நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.அவர் தவிர மேலும் 3 நீதிபதிகள் பதவி உயர்த்தப்பட்டு மத்திய அரசுக்குஉச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
இதில் கற்பக விநாயகத்தை ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகநியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்கள் குறித்து சம்பந்தப்பட்டமாநில அரசுகளுடன் மத்திய சட்ட அமைச்சகம் கலந்தாலோசித்து இவர்களதுநியமனம் குறித்த அறிக்கையை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கும்.
அதன் பிறகு இவர்களது நியமனங்கள் முறைப்படி அறிவிக்கப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications