இருக்கும் தரிசு நிலம் 1.95 லட்சம் ஏக்கர் தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் தரிசு நிலம் வழங்கும் திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் தொடங்கி விட்டதாக முதல்வர் கருணாநிதி சட்டசபையில்தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் இன்று விதி எண் 110ன் கீழ் கருணாநிதி அறிக்கை ஒன்றை வாசித்தார்.அதில், நேற்று நிதியமைச்சருக்கு போதிய நேரம் கிடைக்காததால் நான் இங்கேசொல்வதாக இருந்த சில கருத்துக்களை, சில செய்திகளை வேறு வழியின்றி 110வதுவிதியின் கீழ் மாமன்றத்தில் வைக்கிறேன்.

2006ம் ஆண்டு நடந்த பேரவை பொதுத் தேர்தலில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிஆதரவுடன் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில, குறிபபிடப்பட்ட வாக்குறுதிகள்இந்த மூன்று மாத காலத்திற்குள்ளாகவே பெரும் பகுதி நிறைவேற்றப்பட்டுள்ளன.

தேர்தல் வாக்குறுதிகள் ஒரே கட்டமாக நிறைவேற்றப்படுவதும், பல கட்டங்களில்நிறைவேற்றப்படுவதும்தான் நடைமுறை சாத்தியமானதாகும் என்பதை உறுப்பினர்கள்அனுபவரீதியாக அறிவார்கள்.

அதில் ஒன்றான, வண்ணத் தொலைக்காட்சி இல்லா வீடுகளுக்கு அந்தத்தொலைக்காட்சிப் பெட்டி வழங்கிட ஒரு அனைத்துக் கட்சிக் குழுவை அமைத்துஆலோசனைகளைப் பெற்று முதல்கட்டமாக வரும் செப்டம்பர் மாதம் 30,000பெட்டிகள் வழங்கிட ரூ. 750 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து தொடர்ந்துவழங்குவதென்றும் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு வாக்குறுதியான தரிசு நில வாக்குறுதி பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிஏடு இன்று எழுதியுள்ள தலையங்கததில், தேர்தல் வாக்குறுதியாக தொடங்கி, பட்ஜெட்அறிவிப்பாக இரண்டு ஏக்கர் தரிசு நிலத் திட்டம் கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது நல்லஅம்சம் என்றும்,

இந்த அறிவிப்பை அமலாக்குவது அவ்வளவு சுலபமானதல்ல என்பது உண்மைஎனினும், இத்திட்டம் நிறைவேற ஆக்கப்பூர்வமான யோசனைகள் கூறுவதே மாநிலமக்கள் நலனில் அக்கறையள்ளோரின் தலையாய பணியாகும் என்றும்,

அதிமுக அரசு முன்பு சமர்ப்பித்த பட்ஜெட் உரையில் 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம்இருப்பதாக குறிப்பிட்டுள்ளது என்றும், இந்தியா முழுவதும் உள்ள விவசாயநிலப்பரப்பில் 3.5 சதவீதமே மேற்கு வங்கத்தில் உள்ளது.

ஆனால் இந்தியா முழுவதும் ஏழை விவசாயிகளுக்கு வினியோகிக்கப்பட்ட நிலத்தில்20 சதவீதம் மேற்கு வங்கத்தில் வினியோகிக்கப்பட்டவை என்பது சாதாரணச்செய்தியல்ல என்றும்,

அதிலும் 10.63 லட்சம் ஹெக்டேர் நிலங்களை 26 லட்சத்து 46 ஆயிரம்குடும்பங்களுக்கு வினியோகித்துள்ளனர் என்றும், தரிசு நில வினியோகத் திட்டம்உரியமுறைப்படி செயல்படுத்தப்பட்டால், அதன் பலன் அடித்தட்டு மக்களுக்குகிடைக்கவே செய்யும் என்றும் சுட்டிக்காட்டுவதோடு,

தரிசு நிலம் பற்றிய தேர்தல் அறிக்கை வாக்குறுதியை இந்த அரசு நிறைவேற்றுவதற்குதொடக்கம் செய்து விட்டது என்பதற்கான புள்ளி விவரத்தையும் இந்த அவைக்குவழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அதன் விவரம் வருமாறு:

தமிழகத்திலே உள்ள தரிசு நிலங்களை பயன்படுத்தி நிலமற்ற ஏழை, எளிய விவசாயக்குடும்பங்களுக்கு இரண்டு ஏக்கர் வீதம் அளிப்பது என்று திமுக தேர்தல்அறிக்கையிலும், ஆளுனர் உரையிலும், நிதிநிலை அறிக்கையிலும்அறிவிக்கப்பட்டதற்கிணங்க,

தற்போது தமிழகத்திலே உள்ள தரிசு நிலங்கள் எவ்வளவு எனபது குறித்துகணக்கெடுக்கும் பணி கடந்த ஒருமாத காலமாக தமிழக அரசின் வருவாய்த்துறைமூலமாக மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் வட்டாட்சியர்கள், கிராம நிர்வாகஅலுவலர்கள் ஒத்துழைப்புடன் நடைபெற்று முதற் கட்ட புள்ளி விவரங்கள் தற்போதுஅரசுக்கு வந்துள்ளன.

அதன்படி, ஆக்கிரமிப்பு இலலாத ஒப்படைப்பு செய்யக்கூடிய அரசு புறம்போக்கு தரிசுநிலம் 1 லட்சத்து 95 ஆயிரம் ஏக்கர்.

சிறுகுறு விவசாயிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசு புறம்போக்கு தரிசுநிலம் 67,00 ஏக்கர். 98,000 ஏழை விவசாயிகள் இந்த நிலத்தினை ஆக்கிரமிப்புசெய்துள்ளனர்.

சிறு குறு விவசாயிகளுக்குச் சொந்தமான பட்டா தரிசு நிலம் 7 லட்சம் ஏக்கர். இது 4லட்சத்து 25 ஆயிரம் விவசாயிகளுக்கு சொந்தமானதாகும்.

1. ஆக்கிரமிப்பு இல்லாத அரசுக்குச் சொந்தமான 1 லட்சத்து 95 ஆயிரம் தரிசுநிலத்தினை மேம்படுத்தி நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு தலா 2 ஏக்கர் வீதம் பிரித்துவழங்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு விட்டன.

2. சிறு குறு விவசாயிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசு புறம்போக்கு தரிசுநிலமான 67,000 ஏக்கரை பண்படுத்தி அதனை ஆக்கிரமித்துள்ள 98,000விவசாயிகளுக்கே மீண்டும் வழங்கப் போகிறோம்.

3. சிறு குறு விவசாயிகளுக்குச் சொந்தமான 7 லட்சம் ஏக்கர் தரிசு பட்டா நிலத்தைப்பொறுத்தவரையில், அவர்களாகவே விரும்பிக் கேட்டுக் கொண்டால், அந்தநிலத்தினை விவசாயம் செய்யத்தக்க நிலமாக பண்படுத்தி அவர்களுக்கே திருப்பித்தருவோம்.

எனவே இந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள 5 லட்சம் ஏழைவிவசாயக் குடும்பங்களுக்கு தரிசு நிலத்தை மேம்படுத்தி இந்த அரசினால்வழங்கப்படவுள்ளது.

அதற்கான தொடக்கப் பணிகள் நடந்து வருகின்றன என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+