புலிகளின் கண்ணி வெடிக்கு 16 ராணுவத்தினர் பலி
கொழும்பு:
இலங்கையில் இன்று புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கி 16 ராணுவத்தினர் பலியாயினர்.
திரிகோணமலை மாவட்டத்தில் சிங்கள கிராமங்களுக்குச் செல்லும் மவிலாறுதடுப்பணையின் மதகுகளை விடுதலைப் புலிகள் மூடி விட்டதையடுத்து விடுதலைப்புலிகளின் நிலைகள் மீது இலங்கை ராணுவமும் மற்றும் விமானப் படைகள்தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.மதகுகளை திறந்து விட விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குள்ராணுவத்தினர் ஊடுருவி வருகின்றனர். அவர்களை புலிகள் தாக்கி வருகின்றனர்.
இதில் நேற்று மட்டும் இரு தரப்பிலும் 42 பேர் வரை பலியாகியுள்ளனர்.
இந் நிலையில் மின்னேரியா என்ற இடத்தில் இருந்து இன்று காலை அல்லகாந்தலே ராணுவ முகாமுக்கு 20வீரர்களுடன் ஒரு பஸ் சென்றது. புலிகள் மீது தாக்குதல் நடத்த இவர்கள் சென்று கொண்டிருந்தனர்
இந்த பஸ் கண்ணி வெடியில் சிக்கி சிதறியது. இதில் 16 ராணுவ வீரர்கள் பலியாயினர். மேலும் இருவர்படுகாயமடைந்தனர்.
தமிழ் பத்திரிக்கைகளுக்கு மிரட்டல்:
இந் நிலையில் இலங்கையில் முன்னணி தமிழ் நாளிதழ்களான சுடர் ஒளி, தினக்குரல் ஆகியவற்றின்வினியோகஸ்தர்களுக்கு சிங்களர்கள், கருணா தரப்பினர் விடுத்து வரும் கொலை மிரட்டல் காரணமாக அவற்றின்விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இந்த பத்திரிக்கைகளை வினியோகிக்க சிங்கள வெறியர்களும்அரசும் பல விதங்களிலும் தடை விதித்து வருகின்றன. இதற்கு கருணா அமைப்பினரையும் பயன்படுத்திவருகின்றனர்.
இலங்கை அரசின் இந்தச் செயலுக்கு நியூயார்க்கை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் பத்திரிக்கையாளர்கள்பாதுகாப்பு கமிட்டி (சிபிஜே) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆனால், தாங்கள் யாரையும் மிரட்டவில்லை என கருணா தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
ராணுவ கிட்டங்கியில் பயங்கர தீ விபத்து:
இலங்கையின் கலுத்தரா நகரில் உள்ள ராணுவ வெடிபொருள் கிட்டங்கியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் வெடிபொருட்கள்பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறின.
கட்டுகுருண்டா என்ற இடத்தில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அதிரடிப்படை காவலர் மையத்தில் வெடிபொருட்கள்,ஆயுதங்களை வைத்திருக்கும் கிட்டங்கி உள்ளது. இந்த மையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வெடிபொருட்கள்பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறின. தீயணைப்புப் படை வீரர்கள் கடுமையாக போராடி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
ராணுவ அதிரடிப்படை போலீஸாருக்கு பயிற்சியின்போது பயன்படுத்துவதற்காக இந்த வெடிபொருட்கள் இருப்புவைக்கப்பட்டிருந்தன. மின்கசிவு காரணமாக இந்த விபத்து நடந்ததாக ராணுவம் கருதுகிறது. இருப்பினும் தீவிர விசாரணைக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications