ஆந்திரா அணை கட்டுவதை தடுப்போம்-பொன்முடி
சென்னை:
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை தடுப்போம் என அமைச்சர்பொன்முடி கூறினார்.
காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன், அதிமுக எம்எல்ஏ பாண்டுரங்கன் ஆகியோர்பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவது தொடர்பாக தமிழகசட்டசபையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.இதுகுறித்து ஞானசேகரனை பேச அழைத்தார் சபாநாயகர் ஆவுடையப்பன். இதற்குஅதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
இதையடுத்து முதல்வர் கருணாநிதி குறுக்கீட்டு, இந்த கவன ஈர்ப்பு தீர்மானம்ஞானசேகரன், பாண்டுரங்கன் ஆகிய இருவர் பெயரிலும் கொடுக்கப்பட்டுள்ளது.எனவே இரண்டு உறுப்பினர்களையும் துணை கேள்விகள் கேட்க சபாநாயகர்அனுமதிக்கலாம் என்றார்.
ஞானசேகரன்: பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு 32 இடங்களில் தடுப்பு அணைகட்டியுள்ளது. ஆந்திராவில் இந்த ஆறு ஓடும் மொத்த நீளமே 33 கிலோ மீட்டர்தான்.தற்போது ரூ. 250 கோடி செலவில் பாலாற்றின் குறுக்கே மிகப்பெரிய அணை ஒன்றைகட்ட ஆந்திர அரசு ஏற்பாடு செய்துள்ளது.
1892ம் ஆண்டின் ஒப்பந்தத்தின்படி பாலாற்றின் குறுக்கே ஆந்திராவின் அணைகட்டக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. வருகிற 5ம் தேதி தமிழக அமைச்சர்கள்ஆந்திரா சென்று கிருஷ்ணா நதி நீர் பற்றி பேச இருக்கிறார்கள். அப்போது இந்தபிரச்சனை குறித்தும் பேச வேண்டும்.
தேவைப்பட்டால் முதல்வரும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும். இந்தஅணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டில் 5 மாவட்டங்கள் வறண்டு விடும்.
பாண்டுரங்கன்: ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்ட மத்திய அரசிடம்அனுமதி பெற்றுள்ளதா? மத்திய சுற்றுச்சூழல் துறை இதற்கு அனுமதிகொடுத்துள்ளதா? உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதா? என்பதற்குவிளக்கம் அளிக்க வேண்டும்.
அமைச்சர் பொன்முடி: முந்தைய அதிமுக அரசு பாலாற்றின் குறுக்கே அணையைகட்டக் கூடாது என்று 10.02.2006ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துஇருக்கிறது. இது கூட தெரியாமல் பாண்டுரங்கன் எப்படி அமைச்சராக இருந்தார்என்பது வியப்பாக இருக்கிறது.
இந்த வழக்கு முறைப்படி நடத்தப்படும். வருகிற 5ம் தேதி நானும், உள்ளாட்சி துறைஅமைச்சரும் ஆந்திரா சென்று கிருஷ்ணா நதி நீர் பகிர்வு குறித்து பேசும் போது ஆந்திரமுதல்வரிடம் பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுக்கும் வகையில்பேச்சுவார்த்தை நடத்துவோம்.
முதல்வரும் எங்களுடன் வர விருப்பம் தெரிவித்துள்ளார். ஆந்திர முதல்வருடன்பேச்சு வார்த்தை நடத்துவதற்கான தேதியை கேட்டு வருமாறு கூறி இருக்கிறார். மத்தியசுற்றுச்சூழல் துறை இந்த அணையை கட்ட எந்த அனுமதியும் வழங்கவில்லை.பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கைஎடுக்கப்படும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications