பஹ்ரைன் தீ: உயிர் தப்பியும் தினம் தினம் செத்துப் பிழைக்கும் தமிழர்கள்
துபாய்:
பஹ்ரைன் தீ விபத்தில் உயிர் தப்பி தற்காலிக நிவாரண முகாம்களில் தஞ்சம்புகுந்திருக்கும் 196 தமிழர்களும் தங்களது எதிர்காலம் குறித்து பெரும் கவலையில்மூழ்கியுள்ளனர்.
அத்தோடு சரியான சாப்பாடும் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பஹ்ரைன்தலைநகர் மனாமாவில் இந்தியாவைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள்தங்கியிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில், 16 தமிழர்கள் பரிதாபமாக இறந்தனர்.விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த 196 பேர் அங்கிருந்து மீட்கப்பட்டு தற்காலிக நிவாரணமுகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாமில் அடிப்படை வசதிகள் கூடஇல்லை. மின்சார வினியோகமும் படு மோசமாக உள்ளது.
சாப்பாடும் சரியில்லை. 2 சப்பாத்திகளும், 2 பாட்டில் தண்ணீரும் மட்டுமேஅவர்களுக்குத் தரப்படுகிறது. இவர்களின் நிலையை அறிந்த பல தொண்டுநிறுவனங்கள் உதவுவதாக கூறி புகைப்படம் எல்லாம் எடுத்துச் சென்றன. ஆனால்அதன் பின்னர் யாரையும் காணோம்.
இருப்பினும் அந் நாட்டு மதத் தலைவர்கள் சிலர் இந்த அப்பாவி இந்தியர்களுக்குஉதவ முன் வந்துள்ளனர். உணவும், குடிநீரும் போதுமான அளவில் கிடைக்கஅவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இவர்களை பணியில் அமர்த்திய நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரியும் இந்தப்பக்கம் எட்டிக் கூட பார்க்கவில்லையாம். சாப்பாட்டுக்காக தினமும் 3 தினார் (ரூ. 370)தருவதாக அவர்கள் கூறியிருந்தனர். ஆனால் இதுவரை தரவில்லை. அத்தாடு சம்பளப்பணத்தையும் தரவில்லை.
இது போதாதென்று, இன்னொரு பிரச்சினையும் இந்த 193 பேரின் மனதையும் வாட்டிவருகிறது. இவர்கள் அனைவரும் முறையான விசாவின் கீழ் இங்கு வேலையில்அமர்த்தப்படவில்லை.
இதனால் இவர்களை இந்தியாவுக்கே திருப்பி அனுப்ப பஹ்ரைன் அரசு முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது. ஒவ்வொருவரும் தலா ரூ. ஒன்றரை லட்சம் ரூபாய்பணத்தை ஏஜன்டுகளிடம் கொடுத்து தான் பஹ்ரைன் வந்துள்ளனர்.
இங்கு வந்த பின்னர் முறையாக சம்பளம் தரப்படவில்லை. இந் நிலையில் தாங்கள்ஊருக்கு அனுப்பப்பட்டால் மிகுந்த சிரமத்திற்குள்ளாக நேரிடும் என்ற கவலையில்இவர்கள் உள்ளனர்.
பஹ்ரைனில் இதுபோல முறையற்ற விசாக்கள் மூலம் கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கும்மேற்பட்டோர் வேலை பார்த்து வருவதாக பஹ்ரைன் வர்த்தக சபை தெரிவித்துள்ளது.
இவர்களுக்கு முறையான இன்சூரன்சும் கிடையாது. பாதிப்பு ஏற்பட்டால் அரசின்உதவிகளும் கிடைக்காது. பிரச்சினை ஏற்பட்டால் தொழிலாளர்களை இந்தநிறுவனங்கள் அம்போ என விட்டு விட்டுப் போய் விடுமாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications