மேட்டூர் அணை புதிய சாதனை!
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்:
கடந்த ஒரு வருடமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்குக் குறையாமல்இருந்து புதிய சாதனை படைத்துள்ளது.
மேட்டூர் அணை கடந்த 1934ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகும் காவிரி ஆற்றின்குறுக்கே கட்டப்பட்டது இந்த அணை.அணை கட்டப்பட்டு இத்தனை ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் புதிய சாதனைஒன்றை மேட்டூர் அணை படைத்துள்ளது. கடந்த ஒரு ஆண்டாக 100 அடிக்குக்குறையாமல் அணையின் நீர் இருப்பு உள்ளது. இது ஒரு புதிய சாதனை ஆகும்.
அணையின் வரலாற்றிலே தொடர்ந்து ஒரு ஆண்டு முழுவதும் 100 அடிக்குக்குறையாமல் நீர் இருப்பு இருந்ததில்லை.
100 அடி கொள்ளளவில் இன்றுடன் 365 நாட்களை பூர்த்தி செய்துள்ளது மேட்டூர்அணை. இன்று காலைஅணையின் நீர் மட்டம் 110 அடியாக இருந்தது.
அணைக்கு வினாடிக்கு 15,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. ஒரு வருடமாக100 அடி கொள்ளளவில் அணை இருந்து வருவதால் சிறப்பு பூஜைகள் நடத்தபொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏறபாடு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications