பைனான்சியர்..போலீஸ்..போட்டோ..கற்பழிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஏட்டையாவின் மகளை சினிமா பைனான்சியர் கடத்திச் சென்று கட்டாய தாலி கட்டி கற்பழிக்க உடந்தையாகஇருந்த 4 போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Caroline with Gopikannan
கரோலினுடன் கோபிகண்ணன்..
மிரட்டி எடுத்த படமா?

சென்னை ராயபுரத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ஏட்டு தங்கராஜின் மகள் கரோலினை (16), மைலாப்பூரைச் சேர்ந்தசினிமா பைனான்சியர் கோபி கண்ணன் (48) கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்தார். மேலும் கரோலினைகடத்தி, மறைத்து வைத்தார்.

இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் கரோலினின் தாயார் காயத்ரி ஹேபியஸ் கார்பஸ் மனுவும் தாக்கல் செய்தார்.நீதிமன்றம் தலையிட்டதையடுத்து மைலாப்பூர் போலீசார் கரோலினை ஆண்டிப்பட்டியில் மீட்டனர்.

தொட்டால் பூ மலரும் என்ற படத்தில் நடிக்க வைப்பதாக கூறி கரோலினை புக் செய்த கோபிக்கண்ணன், செக்ஸ்தொல்லை கொடுத்தார். இதையடுத்து நடிப்பை விட்டுவிட்டு ஓடி வந்த கரோலினையும் அவரது தந்தையும்தனக்கு வேண்டிய போலீசாரைக் கொண்டு கோபிக்கண்ணன் மிரட்டினார்.

மேலும் தனக்கு வேண்டிய போலீசார் பணியாற்றும் மைலாப்பூர், திண்டிவனம், மெரீனா கடற்கரை ஆகிய காவல்நிலையங்களில் கரோலின் மற்றும் தங்கராஜ் மீது பொய் புகார்களும் கொடுத்தார். கோபியின் தொல்லைதொடர்ந்ததால் தங்கராஜ் சென்னையில் இருந்து பாண்டிச்சேரிக்கு இடம் மாறினார்.

ஆனால், தனது நண்பரான மைலாப்பூர் (கிரைம்) சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், அதே காவல் நிலைய ஏட்டுஉதயகுமார், மைலாப்பூர் காவல் நியை பெண் போலீஸ் செந்தாமரை செல்வி, மெரீனா கடற்கறை ஏட்டு சந்திரன்ஆகியோரை அழைத்து கொண்டு பாண்டிச்சேரி சென்ற கோபிக் கண்ணன், தங்கராஜ், அவரது மனைவி, கரோலின்ஆகியோரை கடத்தி வந்தார்.

கட்டாய தாலி-கற்பழிப்பு:

முட்டுக்காடு என்ற இடத்தில் வைத்து கரோலினை கோவிலுக்குள் இழுத்து சென்று கட்டாய தாலி கட்டினார்.பின்னர் கரோலினின் பெற்றோரை விரட்டி விட்டுவிட்டு, சென்னை தி.நகரில் ஒரு வீட்டில் வைத்து கரோலினைகற்பழித்துள்ளார் கோபிக்கண்ணன்.

Caroline
கரோலின்

கோபிகண்ணன் மீது கற்பழிப்பு மற்றும் ஆள் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கோபிக்குஉடந்தையாக இருந்த சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், போலீசார் உதயகுமார், சந்திரன், செந்தாமரை செல்விஆகிய 4 பேர் மீதும் ஆள் கடத்தல் மற்றும் கற்பழிப்புக்கு உடந்தை ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

4 போலீசார் சஸ்பெண்ட்:

இந் நிலையில் இந்த நால்வரையும் சஸ்பெண்ட் செய்து கமிஷ்னர் லத்திகா சரண் இன்று உத்தரவிட்டார். ஆனால்,இந்த நால்வருமே தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து இவர்களைப் பிடிக்க தனிப்படைஅமைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கரோலினுக்கு மருத்துவபரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் கரோலினிடம் வாக்குமூலமும்பெறப்பட்டுள்ளது.

இந் நிலையில் கரோலினை கடத்தி, கற்பழிக்க உடந்தையாக இருந்த 4 போலீசாரும்இந்த வழக்கில் இருந்து தப்ப தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கைதிசை திருப்பும் வகையில் கரோலினும் கோபிக்கண்ணனும் மகிழ்ச்சியாக இருப்பதுபோன்ற படங்களை வெளியிட்டுள்ளனர்.

ஆனால், தன்னை மிரட்டித் தான் இந்தப் படங்களை போலீசார் எடுத்ததாக கரோலின்கூறியுள்ளார்.

கரோலின் பேட்டி:

தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கரோலின் கூறியதாவது,

கோபிக்கண்ணன் என்னை சினிமாவில் நடிக்க வைப்பதாக சொல்லித் தான்அறிமுகமானார். ஆனால், பின்னர் என்னை திருமணம் செய்ய விரும்புவதாகக்கூறினார். ஏற்கனவே திருமணமான அவரிடம் சிக்க விரும்பாமல் நான் சினிமாவேவேண்டாம் என்று கூறிவிட்டு வந்துவிட்டேன்.

ஆனால், தனக்கு வேண்டிய போலீசாரை வைத்துக் கொண்டு மிரட்டினார். இதனால்சென்னையை விட்டு பாண்டிச்சேரிக்கு குடும்பத்தோடு மாறிப் போய்விட்டோம்.ஆனால், 4 போலீசாருடன் பாண்டிச்சேரிக்கு வந்த கோபிக்கண்ணன் என்னையும்அம்மாவையும் அப்பாவையும் கடத்திக் கொண்டு வந்தார்.

என்னையும் அம்மாவையும் அப்பாவையும் பாண்டிச்சேரியில் இருந்து கடத்தி வந்தபோது நான் கருப்பு நிற சுடிதார் அணிந்திருந்தேன். பின்னர் தியாகராய நகரில் ஒருகடையில் ஆரஞ்சு நிற சுடிதார் மற்றும் ஆடைகள் வாங்கித் தந்து நம்ம 2 பேருக்கும்கல்யாணம் நடக்க போகிறது, புது ஆடை உடுத்திவா என கோவி கண்ணன் கூறினார்.

படங்கள்:

அதற்கு நான் சம்மதிக்கவில்லை. கோபமடைந்த அவர் என் தலைமுடியை பிடித்துஇழுத்து குனிய வைத்து குத்தினார். என் அப்பா, அம்மாவையும் அடித்துதுன்புறுத்தினார். இதனால் நான் பயந்து போய் அங்குள்ள ஒரு அறையில் உடைமாற்றினேன்.

நான் உடை மாற்றும் போது கோவி கண்ணன் என்னை ரகசியமாக நிர்வாண படம்எடுத்துள்ளார். அது எனக்கு அப்போது தெரியவில்லை. பின்னர் அதைக் காட்டிஎன்னை சித்திரவதை செய்தார்.

என்னை தன்னுடன் ஜோடியாக நிற்க வைத்து படம் எடுத்தார். அதை நான்தடுத்தபோது, என்னை நிர்வாணமாக எடுத்த படத்தைக் காட்டி இதை இண்டர்நெட்டில்வெளியிடுவேன். நீ ஒரு விபசாரி என கூறி எல்லா பத்திரிகைகளுக்கும் உன் படத்தைகொடுப்பேன் என்று மிரட்டினார். இதனால் அவருடன் நின்று படங்களை எடுத்துக்கொண்டேன்.

இந்தப் படங்களைத் தான் இப்போது போலீசார் மூலம் வெளியிட்டு, நானே விரும்பிகோபிக்கண்ணனுடன் சுற்றியது மாதிரி காட்ட முயன்றுள்ளார்கள்.

ஏட்டு சந்திரன் என்னை மிரட்டி கோபிகண்ணனுடன் சேர்ந்து ஜோடியாக நெருக்கமாகஇருப்பது போல் நிறைய படம் எடுத்தார்.

அதே போல ஒரு கோவிலில் வைத்து போலீசார் உதவியோடு கட்டாயமாக தாலிகட்டினார். அதையும் படம் பிடித்தார். பின்னர் ஒரு வீட்டில் அடைத்து வைத்துகற்பழித்தார்.

நான் ஊஞ்சலில் இருப்பது போலவும், அவரது மடியில் நான் இருப்பது போலவும்படம் எடுக்கும் போது என்னை சிரிக்க சொல்லி குத்தி தலைமுடியை பிடித்து இழுத்துகொடுமைப்படுத்தினார்.

என்னை மிரட்டி எடுத்த போட்டோக்கள் எல்லாவற்றையும் அவர் ஒரு ஆல்பமாகதயாரித்து வைத்து உள்ளார். அதை அடிக்கடி என்னிடம் காட்டி மிரட்டினார். நீ என்னைவிட்டு ஓட நினைத்தால் நாம் ஜோடியாக உள்ள படத்தை ஏதாவது உப்புமாபத்திரிகைக்கு கொடுத்து போடச் சொல்லிவிடுவேன்.

அவர்களும் ஜெயலட்சும், ஜனனி படத்தை போடுவதை போல போட்டி போட்டுகொண்டு உனது படத்தை போடுவர்கள் உன்னை பார்த்து ஊரே சிரிக்கும் எனமிரட்டினார்.

நானாக விரும்பி அவருடன் வாழ்ந்திருந்தால் ஏன் நீதிமன்றத்தல் புகார் செய்யப்போகிறேன்?

என் திருமணம் முறைப்படி நடந்திருந்தால் எனது அப்பா, அம்மா எங்கேபோனார்கள்? ஆதாரத்தை காட்ட முடியுமா? அரசியல்வாதிகள், அதிகாரிகளின்உதவியை வைத்துக் கொண்டு கோபிக்கண்ணனும், 4 போலீசாரும் ஊரை ஏமாற்றப்பார்க்கின்றனர் என்றார் கரோலின்.

வயது என்ன?:

இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு கோவி கண்ணன்மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கரோலினி மைனர் பெண் இல்லை என்றும்,19 வயது நிரம்பிய மேஜர் பெண் என்றும் காட்டியுள்ளார்.

ஆனால், கரோலினின் பள்ளிச் சான்றிதழ்களின்படி அவருக்கு 16 வயதே ஆகிறதுஎன்பது உறுதியாகியுள்ளது.

துணை கமிஷ்னர் மீது ஏட்டு புகார்:

இந் நிலையில் இந்த வழக்கில் சிக்கி இப்போது தலைமறைவாகிவிட்ட ஏட்டு சந்திரன்கூறுகையில்,

இந்த விவகாரத்தில் நான் தலையிடவே இல்லை. மைலாப்பூர் துணை கமிஷ்னர்மெளரியா தான் என்னை போலீஸ் டீமோடு பாண்டிச்சேரிக்குப் போகச் சொன்னார்.அதன்படி தான் மற்ற 3 போலீசாருடன் போனேன். இப்போது உயர் அதிகாரிகள்என்னை பலிகடா ஆக்கிவிட்டார்கள். விரைவில் இதில் தொடர்புள்ள அதிகாரிகளைபகிரங்கப்படுத்துவேன் என்றார்.

இதைச் சொல்லிவிட்டு ஆள் தலைமறைவாகிவிட்டார்.

ஏட்டு ஒரு மோசடி பேர்வழி:

இது குறித்து துணை கமிஷ்னர் மெளரியாவிடம் கேட்டபோது, ஏட்டு சந்திரன்ஆரம்பத்திலிருந்தே மோசடிப் பேர்வழி தான். சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்குதரப்பட்ட 6 படகுகளை விற்று காசாக்கி மக்களிடம் மாட்டி அடிவாங்கியவர் தான்.அந்த புகாரை பாவம் என்று விட்டுவிட்டேன். இப்போது தேவையில்லாமல் என்பெயரை இந்த கேஸில் இழுத்துள்ளார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+