மாணவிகளிடம் ஈவ்-டீசிங்-ஏட்டையா கைது!!
சென்னை:
சென்னையில் பஸ்சில் மாணவிகள் மீது உரசியும், இடித்தும், விழுந்தும் ஈவ்-டீசிங் செய்த ஏட்டையாவை பொதுமக்களே பிடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ஓட்டேரி அருகே அரசு பஸ்சில் பயணித்த மாணவிகள் இருவரை ஒருவர் வேண்டுமென்றே உரசிக்கொண்டிருந்தார். அடிக்கடி இடித்தார், முடிந்தபோதெல்லாம் மேலேயும் விழுந்தார்.இதனால் அந்த மாணவிகள் நெளிந்தனர். ஆனாலும் இடி மன்னன் விடவில்லை. தொடர்ந்து இம்சித்தார்.இதையடுத்து அந்த மாணவிகள் அருகே நின்றிருந்த வரதம்மாள் (58) என்பவரிடம், பாட்டி இந்த ஆளைகொஞ்சம் ஒழுங்கா இருக்க சொல்லுங்க என்றனர்.
இதையடுத்து வரதம்மாள் பெண் தலையிட்டு, அந்த நபரை எச்சரித்தார். ஆனால், நீ யாருடி என்று கேட்டபடிஅந்தப் பெண்ணை அறைந்தார்.
இதனால் பிற பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர். பஸ் புளியந்தோப்பு காவல் நிலையத்தை அடைந்தபோது,பஸ்ஸை நிறுத்தச் சொன்ன வரதம்மாள், பயணிகள் உதவியோடு இடி மன்னனை பிடித்து அடித்து போலீஸ்நிலையத்துக்குள் இழுத்துச் சென்றார்.
அவரிடம் போலீசார் விசாரணைை நடத்தியபோது, அவரது பெயர் கிருஸ்துதாஸ் (46) என்றும் அண்ணா நகர்காவல் நிலைய ஏட்டு என்றும் தெரியவந்தது. குடிபோதையில் இருந்த கிருஸ்துதாஸை அந்தப் பெண்களிடம்மன்னிப்பு கேட்குமாறு போலீசார் கூறினர்.
நான் எதுக்கு மன்னிப்பு கேட்கனும் என்று வீர வசனம் பேசிவிட்டு தாஸ் தப்பியோடினார். இதையடுத்து அவரைபஸ் பயணிகள் விரட்டிச் சென்று பிடித்தனர். இதையடுத்து போலீசாரும் தங்கள் பங்குக்கு நாலு அறைவிட்டதோடு, அவரை கைது செய்தனர்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், தாஸை சஸ்பெண்ட் செய்து கமிஷ்னர் லத்திகா சரண் உத்தரவிட்டார்.தாஸின் சொந்த ஊர் கன்னியாகுமரி அருகே உள்ள களியக்காவிளையாகும்.
இது குறித்து வரதம்மாள் கூறுகையில், ஏட்டையாவே குடிச்சுப்புட்டு இப்படி நடந்துக்கிட்டா எப்படி? என்றார்.இது, கலி காலம் வரதம்மா...
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications