பொது இடங்களில் கிளிக்-செளதி அரசு அனுமதி
ரியாத்:
செளதி அரேபியாவில் பொது இடங்களில் புகைப்படம் எடுக்க விதிக்கப்பட்ட தடையை அந்நாட்டு அரசுநீக்கியுள்ளது.
இஸ்லாம் மதம் உதித்த மண்ணான செளதி அரேபியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. மற்றமுஸ்லீம்நாடுகளைப் போல அல்லாமல், தீவிர மதக் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.இங்கு பொது இடங்களில் புகைப்படம் எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல முஸ்லீம் பெண்களின்புகைப்படங்களை பத்திரிகைகளில பிரசுரிக்கவும் தடை உள்ளது.
ஆனால் தடையை மீறி செளதி பெண்களின் முகம் மட்டும் தெரியும் வகையில், பல பத்திரிக்கைகள்புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றன.
இதற்கு முஸ்லீம் மதத் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர். அதைத் தடுத்து நிறுத்துமாறுமன்னர் அப்துல்லாவுக்கு அவர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். இதையடுத்து கடந்த மே மாதம் செளதிபெண்களின் புகைப்படங்களை பிரசுரிக்க தடை விதித்தார் மன்னர்.
இந் நிலையில், செளதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் பொது இடங்களில் புகைப்படம் எடுக்கவிதிக்கப்பட்டிருந்த தடையை மன்னர் அப்துல்லா நீக்கியுள்ளார்.
இந்த அனுமதி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாகவே வழங்கப்பட்டு விட்டது. ஆனாலும் இப்போது தான் அதைசெளதி உள்துறை அமைச்சகம் அமல்படுத்தியுள்ளது.
இந்தத் தடை நீக்கம் மூலம், சுற்றுலாத் தலங்கள், பாரம்பரிய நினைவுச் சின்னங்கள், புகைப்படம் எடுக்க தடைவிதிக்கப்படாத அரசு அலுவலகங்களை யார் வேண்டுமானாலும் இனிமேல் புகைப்படம் எடுக்கலாம்.
அதேசமயம், மன்னரின் அரண்மனைகள், மாளிகைகள் போன்ற தனி நபர்களுக்குச் சொந்தமான இடங்கள், தனிநபர்களை பொது இடங்களில் புகைப்படம் எடுக்க தடை நீடிக்கிறது.
முன் அனுமதி பெற்ற பின்னர்தான் இவற்றை புகைப்படம் எடுக்க முடியும்.இந்த தடை நீக்கம் மூலம் செளதி அரேபியாவின் பெருமைகள், புகைப்படங்கள் மூலமாகவும் வெளியுலகுக்குப்பரவி அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் செளதிக்கு வருவார்கள் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications