விபத்தில் தனுஷ்கோடி ஆதித்தன் படுகாயம்: மனைவி பலி!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளம் அருகே நடந்த சாலை விபத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பியுமானதனுஷ்கோடி ஆதித்தன் படுகாயம் அடைந்தார். அவரது மனைவி பலியானார்.

தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் வி.இ.சாலையில் உள்ள ஹோட்டலில் சனிக்கிழமை மாலை நடந்தது. இதில்கலந்துகொள்வதற்காக பாளையங் கோட்டையிலிருந்து தனுஷ்கோடி ஆதித்தன் காரில் வந்தார். அவருடன் தூத்துக்குடிமருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்காக மனைவி இந்திரா தேவி (வயது 48), துணைக்கு மகள் செந்தியா ஆகியோர்உடன் வந்தனர்.

மேலும் காரில் உறவினர்கள் வெங்கடேஷ், சிவகிருஷ்ணன், அகிலன் ஆகியோரும் காரில் இருந்தனர். செந்தியாதான் காரைஓட்டி வந்தார். வாகைக்குளத்தை கார் நெருங்கிய போது, முன்னாள் சென்ற டாங்கர் லாரியை முந்த செந்தியா முயன்றுள்ளார்.

அப்போது லாரி மீது கார் உரசி நிலை தடுமாறி சாலையிலிருந்து விலகி சுமார் 100 அடிதூரத்திற்கு இழுத்துச்சென்று தலை கீழாககவிழ்ந்தது. இதில காரில் இருந்த வெங்கடேஷைத் தவிர மற்ற அனைவரும் கீழே தூக்கி வீசப்பட்டனர்.

தனுஷ்கோடி ஆதித்தனை அவரது நெல்லை வீட்டில் பார்த்து விட்டு பேருந்தில் தூத்துக்குடி திரும்பிக் கொண்டிருந்த காங்கிரஸ்பிரமுகர் சொரித்து பிரதாபன், சாலை விபத்தில் தனுஷ்கோடி ஆதித்தனின் கார் சிக்கியிருப்பதைப் பார்த்து பேருந்திலிருந்துஇறங்கினார்.

அந்த வழியாக வந்த ஜீப்பை நிறுத்தி அதில் தனுஷ்கோடி ஆதித்தனை மட்டும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்து மற்றவர்களை ஆம்புலன்ஸ்களில் ஏற்றி தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

அங்கு இந்திரா தேவி வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. தனுஷ்கோடி ஆதித்தனுக்கு கால், கைகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரது உயிருக்கு ஆபத்துஇல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+