இந்திய தூதரக அதிகாரி பாக்.கிலிருந்துவெளியேற்றம்:பாக். அதிகாரியை துரத்தி இந்தியா பதிலடி!
இஸ்லாமாபாத்/ டெல்லி:
உளவு பார்த்ததாக கூறி பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்த தீபக் கெளல் என்ற தூதரக அதிகாரியைஅந்நாட்டு போலீஸார் சித்திரவதை செயதுள்ளனர். அவரை நாட்டை விட்டு வெளியேறு மாறும் பாகிஸ்தான் அரசுஉத்தரவிட்டது. இதற்குப் பதிலடியாக மும்பையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியை 48 மணி நேரத்தில் வெளியேறு மாறுஇந்தியா உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் விசா வழங்கும் பிரிவில் பணியாற்றி வருபவர் தீபக்கெளல். பாகிஸ்தானுக்குவரும் தனது குடும்பத்தினரை வரவேற்பதற்காக கெளல், சனிக்கிழமை காலை ஏழரை மணியள வில் காரில வாகா எல்லைநோக்கி வந்து கொண்டிருந்தார்.வழியில், இஸ்லாமாபாத் மூலாகூர் நெடுஞ்சாலையில் ஒரு தேனீர்க் கடையில் தேனீர் அருந்திக் கொண்டிருந்தார். அப்போதுஅங்கு வந்த 9 பேர் கொண்ட குழு கெளலை சுற்றி வளைத்துப் பிடித்தது. பின்னர் அவருக்கு கை விலங்கிட்டும், கண்களைத்துணியால் கட்டியும், ரகசிய இடத்திற்குக் கொண்டு சென்றனர்.
அங்கு சுமார் 5 மணிநேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் துன்புறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.பின்னர் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திற்கு இந்திய தூதகர அதிகாரிகளை வரவழைத்த பாகிஸ்தான் அதிகாரிகள்,இந்திய அதிகாரிகளிடம் கெளலை ஒப்படைத்தனர்.
பின்னர், கெளல் உளவு பார்த்துள்ளார். தனது அந்தஸ்துக்குப் பொருத்தம் இல்லாத வகையில் செயல்பட்டுள்ளார். அவர் இன்னும்48 மணி நேரத்தில் கெளல் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
பாகிஸ்தானின் இந்த செயலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக டெல்லியில் உயர்மட்டஅளவிலான அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம், வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நவ்தேஜ் சர்னா பேசுகையில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி சையத்முகம்மது ரபீக் நாட்டை விட்டு உடனடியாயக வெளியேறவேண்டும் என இந்தியா உத்தரவிட்டுள்ளது.
விரும்பத்தகாத நபராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியாவை விட்டு அவர் 7ம் தேதிக்குள் (நாளைக்குள்) வெளியேறவேண்டும் என்றார் சர்னா.
பாகிஸ்தான் மற்றும் இந்திய அரசின் இந்த நடவடிக்கைகளால் இருநாடுகளுக்கும் இடையிலான உறவில் பின்னடைவுஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications