ஆங்கிலத்தால் தான் தமிழ் சமுதாயம் வளர்ந்ததாம்: கூறுகிறார் ஈ.வி.கே.எஸ்!
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
ஆங்கில மொழியால் தான் தமிழ்ச் சமுதாயம் வளர்ந்தது என்று கூறி மீண்டும் ஒரு சர்ச்சைக்கு பிள்ளையார் சுழிபோட்டுள்ளார்மத்திய வர்த்தக இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
முன்பு ஒருமுறை ஆங்கிலம் படித்தால் தான் உயர முடியும் என்று பேசி சர்ச்சயைை ஏற்படுத்தினார் இளங்கோவன். இந்தநிலையில் ஆங்கிலத்தால் தான் தமிழ் சமுதாயம் வளர்ந்ததாக கூறி இன்னொரு சர்ச்சைக்குப் பிள்ளையார் சுழி போட்டுள்ளார்.ஈரோட்டில் நடந்த புத்தக திருவிழாவை தொடங்கி வைத்து அவர் பேசுகையில், தமிழ் படிக்க வேண்டும் என்று சிலர்வற்புறுத்துகின்றனர். இதை நான் ஆதரிக்கிறேன். அதேசமயம், ஆங்கிலம் கூடாது என்று கூறக் கூடாது. ஆங்கில மொழியால்தான் தமிழ் சமுதாயம் வளர்ந்தது. தாய் மொழிப் பற்று இருக்க வேண்டியதுதான். அதேசமயம், உலக அறிவு பெற ஆங்கிலம்அவசியம்.
வெறுமனே கதைப் புத்தகத்தை படிக்கிறார்கள் சிலர். அதனால் ஒரு பயனும் கிடையாது. வாழ்க்கை நெறிகளுக்காகதிருக்குறளைப் படிக்கலாம். வீரத்திற்கு பாரதியார் பாடல்களைப் படிக்கலாம். நவீனத் தொழில் நுட்பம் தொடர்பான நூல்களைஇளைஞர்கள் படிக்கலாம் என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications