குடும்பம் குடும்பமாக தூக்கு - பெண்கள் கற்பழிப்பு: சிங்கள ராணுவம் அட்டகாசம் - குமுறும் அகதிகள்!
மண்டபம்:
தமிழர்களை குடும்பம் குடும்பமாக தூக்கில் போட்டு சிங்கள ராணுவம் கொடூரமாக கொன்று வருவதாக இலங்கையிலிருந்துஅகதிகளாக தமிழகம் வந்துள்ள தமிழர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் நிலைமை மோசமடைந்து வருவதையடுதது வெள்ளிக்கிழமை 90 பேரும், சனிக்கிழமை 11 பேரும் அங்கிருந்துஅகதிகளாக தனுஷ்கோடி வந்தனர். அனைவரும் சோதனை மறற உம் விசாரணைக்குப் பின்னர் மண்டபம் முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.இலங்கை நிலை குறித்து முல்லைக்குளத்தைச் சேர்ந்த சீனாரோசான், சகாயம் ஆகியோர் கண்ணீர் மல்க கூறுகையில், ஒரு பாவும்அறியாத பொதமக்களை இலங்கை ராணுவம் கண்மூடித்தனமாக தாக்குகிறது. தமிழர் பகுதிகளில் கடைகளை அடைக்குமாறும்,வெளியில் யாரும் நடமாடக் கூடாதென்றும் ராணுவம் வலியுறுத்துகிறது.
பெண்களை கும்பல் கும்பலாக அழைத்துச் சென்று கற்பழிக்கின்றனர். குடும்பம் குடும்பமாக தூக்கில் போட்டு கொல்கின்றனர்.வங்கானை என்ற இடத்தில் 2 குழந்தைகளையும், அவர்களது பெற்றோர்களையும் தூக்கிலிட்டுக் கொடூரமாக கொன்றது சிங்களராணுவம்.
14 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களை ராணுவத்தில் சேருமாறு துன்புறுத்துகிறார்கள். மறுத்தால் கொன்று விடுகிறார்கள்.இவர்களுக்குப் பயந்து பல சிறுவர்கள் ராணுவத்தில் சேர்ந்துள்ளனர். தமிழர் பகுதிகளில் ராணுவம் ஊடுறுவ இவர்களைப்பயன்படுத்துகிறார்கள் என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
இதற்கிடையே, விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடந்து வந்த மூதூர் நகரிலிருந்துவெளியேறிய 100 பேரை புலிகள் கொன்று விட்டதாக இலங்கை அரசு புகார் கூறியுள்ளது.
துறைக நகரான மூதூரில் ஸ்லீம்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். இப்பகுதியில் ராணுவத்திற்கு எதிராக புலிகள் கடும்தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலால் ராணுவத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந்த சண்டையைத் தொடர்ந்துஅங்கிருந்து 15,000 ஸ்லீமகள் பாதுகாப்பான இடங்ளுக்குச் சென்றுள்ளனர்.
கந்தாளை என்ற இடத்தில் இவர்கள் தஞ்சமடைந்துள்ளனர். அங்கு சரியான இடம் இல்லாமல் மரத்தடியிலும்,சாலையோரத்திலும் அவர்கள் தங்கியுள்ளனர். இப்படி அகதிகளாக வெளியேறிவர்களில்100 பேரை விடுதலைப் புலிகள்பாச்சலூர் என்ற இடத்தில் மறிதத்க கொலை செய்துவிட்டதாக இலங்கை அரசு கூறியுள்ளது.
இவர்கள்இலங்கை ராணுவத்திற்கு ஆதரவானவர்கள் என்பதால் 100 பேரையும் புலிகள் கொன்று விட்டதாக இலங்கை அரசுதெரிவித்துள்ளது.
ஆனால் இதுவரை இத்தகவலை விடுதலைப் புலிகள் தரப்பு கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால் இலங்கை ராணுவம்கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலில் ஏராளமான முஸ்லீம்கள் கொல்லப்படடுள்ளதாக புலிகள் தரப்பு தெரிவித்துள்ளது.எனவே அப்பாவி முஸ்லீம்களை ராணுவமே கொன்று விட்டு புலிகள் மீது பழியை தூக்கிப் போட முயல்வதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications