முன்னாள் அமைச்சர் முத்துசாமிக்கு அதிமுகவில் பதவி!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நீண்ட காலமாக அதிமுகவில் ஓரம் கட்டப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர்முத்துச்சாமிக்கு அமைப்புச் செயலாளர் பதவியை அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா வழங்கியுள்ளார்.
ஜெயலலிதாவின் முதலாவது ஆட்சிக்காலத்தில் முத்துச்சாமி போக்குவரத்துத்துறைஅமைச்சராக இருந்தார். ஜெயலலிதா பதவியிலிருந்து இறங்கிய பின்னர் முத்துச்சாமிகட்சியில் ஓரம் கட்டப்பட்டார். தீவிரஅரசியலில் ஈடுபடாமல் இருந்து வந்தமுத்துச்சாமிக்கு இப்போது ஜெயலலிதா அமைப்புச் செயலாளர் பதவியைவழங்கியுள்ளார்.இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ளஅறிக்கையில், அதிமுக அமைப்புச்செயலாளராக இன்று முதல் முத்துச்சாமி நியமிக்கப்படுகிறார். அவருக்கு கட்சியினர்முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதிமுகவில் ஏற்கனவே கே.ஏ.செங்கோட்டையன், சுலோச்சனா சம்பத், தம்பித்துரை,எஸ்.செம்மலை, விசாலாட்சி நெடுஞ்செழியன், வரகூர் அருணாச்சலம்,எஸ்.கருப்பசாமி, தளவாய்சுந்தரம், விஜயலட்சுமி பழனிச்சாமி, தம்பித்துரை ஆகியோர்அமைப்புச் செயலாளர்களாக உள்ளனர். தற்போது இந்த எண்ணிக்கை 11 ஆகஉயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications