நச்சு இல்லை, நச்ன்னு தான் இருக்கு: பெப்சி, கோக். விளக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பெப்சி, கோகாகோலா குளிர்பானங்கள் குடிப்பதற்குப் பாதுகாப்பான பானங்கள் தான். அதில் அளவுக்கு மீறி நச்சுப் பொருட்கள்எதுவும் இல்லை என்று பெப்சி, கோலா நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளன.

பெப்சி, கோலா பானங்களில் அளவை விட அதிகமாக பூச்சிக் கொல்லிகள் கலந்திருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதையடுத்துஇரு குளிர்பானங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. உச்சநீதிமன்றத்திலும் வழக்குதொடரப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறையாக மகாராஷ்டிர மாநிலத்தில், அனைத்துக் கல்வி நிலையங்களிலும் கோக்,பெப்சிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்யப்படும் கோலாவின தரம் மற்றும் பாதுகாப்பில் எந்தக் குளறுபடியும்இல்லை, உள்ளூர் விதிகளின் படி சர்வதேச தரத்திலேயே கோலாதயாரித்து விற்கப்படுவதாக அந்த நிறுவனத்தின் சர்வதேசசெய்தித் தொடர்பாளர் டெவிட்லர் அமெரிக்காவிலிருந்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் கோலா பானங்கள் சர்வதேச அளவில் பிரபலமான லண்டனில் உள்ளசி.எஸ்.எல் ஆய்வகத்தில் தொடர்ந்து சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. எங்களது மறுப்பை இந்திய அரசுக்குத்தெரிவித்துள்ளோம் என்றார் டெவிட்லர்.

இதேபோல பெப்சி நிறுவனம் புகாரை மறுத்து விளக்கம் அளித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+