கள்ளக் காதல் செய்யும் மனைவியைக் கொல்வது கொலைக் குற்றமல்ல
மதுரை:
கள்ளத்தொடர்பை விடுமாறு கூறியும் கேட்காத மனைவியை ஆத்திரத்தில் கொலை செய்வது, கொலைக் குற்றச் செயல் ஆகாதுஎன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவரின் தண்டனையை7 ஆண்டாக மாற்றியும் உயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பளித்தது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த பாபு என்பவரின் மனைவி வேறு ஒரு நபருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தார். இதை பலமுறை பாபுகண்டித்தும் அதை அவரது மனைவி கேட்கவில்லை. உள்ளூர் பெரியவர்களிடம் புகார் செயதும், அவர்கள் கண்டிததும் கூடபாபுவின் மனைவி கேட்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பாபு தனது மனைவியை கொலை செய்தார்.அவர் மீது திண்டுக்கல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் இ.பி.கோ. 302 (திட்டமிட்டுக் கொலை செய்தல்) பிரிவின் கீழ் வழக்குதொடரப்பட்டது. இந்த வழக்கில் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இத்தீர்ப்பை எதிர்த்து பாபு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அப்பீல் செய்தார். நீதிபதி சொக்கலிங்கம், செல்வம் ஆகியோர்இந்த மனுவை விசாரித்தனர். பலமுறை தனது மனைவியை எச்சரித்தும் அவர் கேட்காததால் தான் கோபம் மற்றும் ஆத்திரத்தால்தான் பாபு கொலை செயதுள்ளார். எனவே இதை திட்டமிட்ட கொலையாக கருத முடியாது. வேண்டும் என்றே அவர் செய்யவில்லை.
எனவே இதை 302வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யத் தேவையில்லை. 304(1) (உந்துதலால் கொலை செய்வது)பிரிவின் கீழ் தான் இந்த வழக்கைப் பதிவு செய்திருக்க வேண்டும். எனவே பாபுவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை 7ஆண்டு கடுங்காவல் தண்டனையாக குறைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications