சபரிமலை, குருவாயூர் கோவில்களுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து!
திருவனந்தபுரம்:
குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோவில், சபரிமலை ஐயப்பன் கோவில்களுக்குதீவிரவாதிகளால் ஆபத்து இருப்பதாக உளவுத்துறை கேரள மாநில அரசைஎச்சரித்துள்ளது.
மும்பை தொடர் வெடிகுண்டு சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள மதவழிபாட்டுத்தலங்கள், முக்கிய இடங்கள், நினைவுச் சின்னங்களுக்கு பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில் சபரிமலை கோவில், குருவாயூர் கோவில்களுக்கு தீவிரவாதிகளால்ஆபத்து ஏற்பட்டிருப்பதாக கேரள அரசை, மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்தஇடங்களைத்தாக்கி மத ரீதியான கலவரத்தை ஏற்படுத்ததீவிரவாதிகள்திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை தெபரிவித்துள்ளது.
மேலும் கேரளாவின்வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த நகரான கொச்சி நகருக்கும்தீவிரவாதிகளால் ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து குருவாயூர்,சபரிமலை கோவில்களுக்கு பாதுகாப்புபலப் படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் தீவிர சோதனைக்குப் பின்னரே உள்ளேஅனுமதிக்கப் படுகிறார்கள்.
கொச்சி நகரிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கிய தொழில் நிறுவனங்கள்,துறைமுகம், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பல மடங்குஅதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications