சூர்யா - ஜோதிகா செப். 11ல் திருமணம்!
சென்னை:
நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா திருமணம் செப்டம்பர் 11ம் தேதி நடைபெறும். 12ம்தேதி சென்னையில் திருமண வரவேற்புநடைபெறும் என சூர்யாவின் தந்தையும், பிரபல நடிகருமான சிவக்குமார் அறிவித்துள்ளார்.
சரவணன் என்ற இயற்பெயர் கொண்ட சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யா, நேருக்கு நேர் படம் மூலம் அறிகமானார். வாலி படம்மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தார் ஜோதிகா. இருவரும் இணைந்து நடித்த முதல் படம் பூவெல்லாம் கேட்டுப்பார். இந்தப்படத்தின் போது தான் இருவருக்கும் காதல் பிறந்தது.தொடர்ந்து உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க, மாயாவி ஆகிய படங்களில் சேர்ந்து நடித்தனர். விரைவில் வரவுள்ளசில்லுன்னு ஒரு காதல் படத்திலும் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட காதல் ஜோடி சூர்யா-ஜோதிகா. ரொம்ப காலத்திற்கு இவர்களது காதல்படுமுகக்கமாக வளர்ந்து வந்தது. ஆனால் இது குறித்த செய்திகள் கசியத் தொடங்கிய போது இருவரும் அதை மறுக்கவும்இல்லை, ஆமாம் என்று ஆமோதிக்கவும் இல்லை.
இவர்களது காதலுக்கு சிவக்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்பட்டது. இருப்பினும் சூர்யாவும், ஜோதிகாவும்தங்களது காதலில் படு உறுதியாக இருந்து வந்ததால், ஒரு வழியாக இறங்கி வந்தார் சிவக்குமார். இதையடுத்து இவர்களதுதிருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார் சிவக்குமார்.
இதைத் தொடர்ந்து தற்போது கல்யாண தேதியை சிவக்குமாரே அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களைசந்தித்து அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில், வருகிற செப்டம்பர் 11ம் தேதி எங்களது மூத்த மகன் சூர்யாவுக்கும்,மும்பையைச் சேர்ந்த சந்தர்-சதானா தம்பதியினரின் மகள் ஜோதிகாவுக்கும் திருமணம் நடத்திட முடிவு செய்துள்ளோம். 12ம்தேதி மாலை ராஜா அண்ணாமலை புரம் மேயர் ராமநாதன் அரங்கில், வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார்சிவக்குமார்.திருமணம் நடைபெறும் இடத்தை சிவக்குமார் தெரிவிக்கவில்லை. அதை ரகசியமாக வைத்துள்ளார் அவர். திருமணத்திற்கு மிகமிக நெருங்கியவர்களை மட்டுமே அழைக்கவுள்ளதாக தெரிகிறது.
திருமணத்திற்குப் பின்னர் ஜோதிகா நடிக்க மாட்டார் என்று தெரிகிறது. சூர்யாவுடன் ஜோதிகா நடித்து வரும் சில்லுன்னுஒருகாதல் படம்தான் அவரின் கடைசிப் படமாக இருககும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது திருமண அழைப்பிதழ்களை அனுப்பும் வேலையில் சிவக்குமார் மும்முரமாக இறங்கியுள்ளார். முதல்வர் கருணாநிதி,முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டக்கியத் தலைவர்களை நேரில் சந்தித்து திருமணத்திற்கு அவர் அழைக்கவுள்ளார்.
அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யா, ஜோதிகா ஜோடி வாழ்க்கையில் ஒன்று சேர இயக்குநர் பாலா மிகவும் உதவியாகஇருந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்தான் சிவக்குமாரிடம் கடுமையாகப் போராடி சமாதானப்படுத்தி தனது அன்புத் தம்பிசூர்யாவின் கனவை நினவாக்கியிருக்கிறார் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
கங்க்ராட்ஸ் ஜோ, சூர்யா!
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications