ஆதித்தனுக்கு சென்னையில் சிகிச்சை:கருணாநிதி அனுப்பிய சிறப்பு விமானம்
தூத்துக்குடி:
சாலை விபத்தில் காயமடைந்து தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனுஷ்கோடி ஆதித்தன் சிறப்பு விமானம் மூலம் இன்று சென்னைக்குக் கொண்டுவருகிறார்.
சாலைவிபத்தில் படுகாயமடைந்து தூத்துகுடியில் உள்ள ஏவிஎம் மருத்துவமனையில்தனுஷ்கோடி ஆதித்தன் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது வலது கை அறுவைச்சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு விட்டது.இந்த நிலையில் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே வைக்கப்பட்டிருக்கும்தனுஷ்கோடி ஆதித்தனை சென்னைக்குக் கொண்டு வந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இதற்காக தமிழக முதல்வர் கருணாநிதியின் ஏற்பாட்டின் பேரில்சிறப்பு விமானம் தூத்துக்குடிக்கு இன்று செல்கிறது.
அதில் தனுஷ்கோடி ஆதித்தன் சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார். அப்பல்லோமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு மேல்சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.மருத்துவமனையிலிருந்து விமான நிலையம் வரை தனுஷ்கோடி ஆதித்தனை கொண்டுசெல்வதற்காக சிறப்பு ஆம்புலன்ஸ் ஒன்றை மதுரை அப்பல்லோ மருத்துவமனைதூத்துக்குடிக்கு ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளது.
தனுஷ்கோடி ஆதித்தனுக்கு லேசாக நினைவு திரும்பியுள்ளது. உடல் நிலையிலும்முன்னேற்றம் காணப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications