கருணாநிதியுடன் எம்.கே. நாராயணன் சந்திப்பு
சென்னை:
இலங்கை விவகாரம் தொடர்பாக முதல்வர் கருணாநிதியை,தேசியபாதுகாப்புஆலோசகர் எம்.கே.நாராயணன் இன்று சந்தித்துப் பேசினார்.
![]() |
இலங்கையில் தமிழர் பகுதிகள் மீது இலங்கை ராணுவம் சமீபத்தில் கடும் தாக்குதல்நடத்தியது. இதைத் தொடர்ந்து இலங்கைப் பிரச்சினை குறித்து தமிழக கட்சிகள்கவலை தெரிவித்தன.
இதையடுத்து இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கை சென்று அந் நாட்டுஅதிபருடன் பேச்சு நடத்தினார்.
மேலும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று கோரியும்தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும் கோரி பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியிருந்தார்.
இதைத் தொடர்ந்து தனது சார்பில் இதுகுறித்து விவாதிக்க தேசிய பாதுகாப்புஆலோசகர் எம்.கே.நாராயணனை சென்னைக்கு அனுப்பி வைப்பதாக மன்மோகன்சிங் தெரிவித்திருந்தார்.
இதைச் சொல்லி ஒரு மாதத்துக்கும் மேலாகிவிட்ட நிலையில் இன்று நாராயணன்சென்னை வந்தார். தலைமைச செயலகத்தில் கருணாநிதியை சந்தித்து சுமார்முக்கால்மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் நாராயணன் பேசுகையில், பிரமதரின் தூதராகமுதல்வரைச் சந்தித்தேன். இலங்கை விஷயத்தில் தற்போது மத்திய அரசுமேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், இந்தியாவின் நிலைப்பாடு ஆகியவை குறித்துமுதல்வரிடம் விவரித்தேன்.
இலங்கையில் வசிக்கும் தமிழர்களின் பாதுகாப்பு குறித்து நேற்று டெல்லி வந்தஅந்நாட்டு வெளியுறவு அமைச்சர் சமரவீராவிடம் இந்தியாவின் சார்பில் உறுதியுடன்வலியுறுத்தப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளையும், தமிழர்களையும் ஒரே மாதிரியாகக் கருதக் கூடாது என்றும்சமரவீராவிடம் கூறப்பட்டுள்ளது என்றார் நாராயணன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications