புதிய வீராணம் திட்டம்-ரூ 295 கோடி முறைகேடுதணிககை அதிகாரி கண்டனம்-விசாரணைக்கு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

புதிய வீராணம் திட்டத்தில் ரூ. 295 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சட்டசபையில் இன்று காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் கவன ஈர்ப்புத் தீர்மானம்ஒன்றைக் கொண்டு வந்து பேசினார். அவர் கூறுகையில்,

இந்திய தணிக்கை ஆணையர் (கம்ட்ரோலர் ஜெனரல் ஆப் இந்தியா) வெளியிட்டுள்ளஅறிக்கையில, தமிழக அரசின் (அதிமுக அரசு) புதிய வீராணம் திட்டத்தில் ரூ.295கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதையே இது காட்டுகிறது. எனவே இதன்மீது அரசு எடுக்கவிருக்கும் நடவடிக்கை என்ன என்றுகேட்டார்.

இதற்கு முதல்வர் கருணாநிதி பதிலளிக்கையில், இந்திய தணிக்கை ஆணையர்வெளியிட்டுள்ள அறிககையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் சரியானவையா என்றுஆய்வு செய்யபபடும். அதில் உள்ளவை சரியான தகவல்களாக இருந்தால், தவறுசெய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்கு வகை செய்யும் விதத்தில், இந்த அறிக்கையை ஆய்வு செய்யும் பணிஉடனடியாகத் தொடங்கும் என்றார் கருணாநிதி.

சட்டசபையைக் கலக்கிய சுனாமி:

அதிமுக அரசின் சுனாமி நிவாரண மோசடி குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று சட்டசபையில் திமுக உறுப்பினர் வேதரத்தினம் கோரிக்கைவிடுத்தார்.

பட்ஜெட் மீதான விவாதத்தில கலந்து கொண்டு வேதரத்தினம் பேசுகையில்,

சுனாமி நிதியை அதிமுகவினரே பங்கு போட்டுக் கொண்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்க நிவாரணம் போய்ச் சேரவில்லை.நாகப்பட்டனம் மாவட்ட ஆட்சித் தலைவரே இதை ஒப்புக் கொண்டுள்ளார் என்றார்.

இதற்கு அதிமுக துணைத் தலைவர் ஓ.பன்னீர்செலவம் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். அவர் பேசுகையில், உள்ளூர்ப் பஞ்சாயத்துத் தலைவர்கள் மூலம்பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதை மாவட்ட ஆட்சித் தலைவர் அங்கீகரித்த பின்னர் தான் நிவாண உதவிகள் வழங்கப்பட்டன.

எனவே அதிமுகவினருக்குத்தான நிவாண உதவிகள் அனைத்தும் வழங்கப்பட்டது என்று கூறுவது தவறான புகார் என்றார்.

அப்போது குறுக்கிட்ட வருவாய்த்துறை அமைச்சர் திண்டுக்கல் பெரியசாமி, ரூ. 48 லட்சம் அளவுக்கு நிதி முறைகேடு நடந்திருப்பதாக மாவட்ட ஆட்சித்தலைவரே தெரிவிததுள்ளார். தவறான தகவல் கொடுத்து பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நீதிமன்ற உத்தரவின் பேரில்விசாரணை நடந்து வருகிறது என்றார்.

விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் எழுந்து, உள்ளூர் பஞ்சாயத்து தலைவர்கள் பயனாளிகளின் பட்டியைலத் தயாரித்திருதாலும் நிவாரண உதவியைவினியோகிக்கும்முன் அதுகுறித்து ஆய்வு செய்து, உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்குத் தான் நிவாரண உதவிகள் போகிறதா என்பதை அரசுதான் உறுதி செய்திருக்க வேண்டும் என்றார்.

இதற்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளிக்கையில், அதைச் செய்வது மாவட்ட ஆட்சித் தலைவர்களின் வேலை. இதில் அரசு எப்படித் தலையிட முடியும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி இப்பிரச்சினையை விட்டு விட்டு வேறு பிரசசினைக்கு போகுமாறு வேதரத்தினத்திற்குஅறிவுறுத்தினார். அத்துடன் சுனாமி பிரசசினை முடிந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+