மோசடி மன்னன் ஆனந்தராஜின் மனைவி கோர்ட்டில் சரண்!
வேலூர்:
வீடு கட்டித் தரும் திட்டம் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான காண்டிராக்டர்களிடம் பலகோடி பணத்தை மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள பிஷப் ஆனந்தராஜின்மனைவி டெய்சி ஆனந்தராஜ், வேலூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே பேரூர் என்ற இடத்தில் மோலின் மிஷன்சர்ச் மற்றும் ரூரல் ரிசோர்சஸ் ரிசர்ச் மையம் என்ற பெயரில் நிறுவனங்களை நடத்திவந்த ஆனந்தராஜ், வீடு கட்டித் தரும் திட்டம் என்ற பெயரில், தமிழகம், ஆந்திராமற்றும் கேரளாவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான காண்டிராக்டர்களை ஏமாற்றி பலகோடி பணத்தை சுருட்டியதாக புகார்கள் கிளம்பின.இதையடுத்து சில நாட்களுக்கு முன்புஆனந்தராஜ் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார். அவரது மனைவி டெய்சி, ஐந்து மகள்கள், வளர்ப்பு மகன் சுரேஷ்,உதவியாளர் பழனி உள்ளிட்ட அத்தனை பேரும் தலைமறைவாகி விட்டனர்.அவர்களைப் பிடிக்க போலீஸார் தீவிரமாக முயன்று வந்தனர்.
இந்த நிலையில் ஆனந்தராஜின் மனைவி டெய்சி, வேலூர் நீதிமன்றத்தில் நேற்றுசரணடைந்தார். அவருடன் வழக்கறிஞர்கள் சிலரும் வந்திருந்தனர். வேலூர் மாவட்டமாஜிஸ்திரேட் ராமச்சந்திரன் முன்னிலையில் சரணடைந்த டெய்சியை ஆகஸ்ட் 18ம்தேதி வரை சிறைக் காவலில் வைக்குமாறும், 18ம் தேதி திருக்கழுக்குன்றம்நீதிமன்றத்தில் டெய்சியை ஆஜர்படுத்த வேண்டும் என்றும்மாஜிஸ்திரேட்உத்தரவிட்டார்.
டெய்சி மீது மோசடிக்கு உடந்தையாக இருந்தது உள்ளிட்ட 2 வழக்குகளை போலீஸார்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications