சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏ. வெளியேற்றம்; கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட்!
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சி பெண்எம்.எல்.ஏக்களைப் பார்த்து ஆபாசமாக பேசியதாக கூறி அதிமுக உறுப்பினர் அக்ரிகிருஷ்ணமூர்த்தி இன்று வெளியேற்றப்பட்டார்.
நடப்புக்கூட்டத் தொடர் முழுவதும் அவர் கூட்டத்தில் கலந்து கொள்ள தடைவிதிக்கப்பட்டது. தமிழக சட்டசபையில் இன்று தொழிலாளர் நலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அதில் கலந்துகொண்டு மார்க்சிஸ்ட்கம் யூனிஸ்ட்உறுப்பினர் பாலபாரதி பேசினார்.அப்போது அதிமுக உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி குறுக்கிட்டு ஆவேசமாக ஏதோகூறினார். இதற்கு திமுக, கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.பதிலுக்கு அதிமுக உறுப்பினர்களும் கடுமையாக வாதம் செய்தனர். இதனால்சபையில் கடும் அமளி நிலவியது.
இந்த நிலையில், காங்கிரஸ் உறுப்பினர் ராணி வெங்கேடசன் உள்ளிட்ட பெண்எம்.எல்.ஏக்கள் எழுந்து, பின்வரிசையில் அமர்ந்துள்ள அதிமுக உறுப்பினர்கள்தொடர்ந்து எங்களைப் பார்த்து ஆபாசமாக பேசுகிறார்கள். காது கொடுத்து கேட்கமுடியாத அளவுக்கு அசிங்கமாக பேசுகிறார்கள்.
இதற்கு சபாநாயகர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர்.இந்த சமயத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி செருப்பால் அடிப்பேன் என்று கோபமாகபேசினார். இதைத் தொடர்ந்து அவரை அவையிலிருந்து வெளியேற்று மாறுசபாநாயகர் உத்தரவிட்டார். மேலும், அமளியில் ஈடுபட்ட அதிமுகஉறுப்பினர்களையும் வெளியேற்ற உத்தரவிட்டார்.
மேலும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியை இந்த கூட்டத் தொடர் முழுமைக்கும் கலந்துகொள்ள தடை விதித்தும் சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications