அன்புமணி விருதுக்கு விளம்பர செலவு ரூ.60 லட்சம்!
டெல்லி:
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி சமீபத்தில்அமெரிக்காவிலிருந்து லூத்தர் டெர்ரி விருது பெற்றதை நாடு முழுவதும்விளம்பரப்படுத்த ரூ. 60 லட்சம் செலவிடப்பட்டதாக அன்புமணியேநாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தார் அன்புமணி. அப்போது புகையிலை, சிகரெட்ஒழிப்பில் மத்திய சுகாதாரத்துறை சிறப்பாக செயல்படுவதைப் பாராட்டும் முகமாகஅன்புமணிக்கு லூத்தர் டெர்ரி விருது வழங்கப்பட்டது.இந்த விருது குறித்த நாடு முழுவதும் உள்ள பத்திரிக்கைகளில் பெரிய அளவில்,மத்தியசுகாதாரத்துறையால் விளம்பரம் செய்யப்பட்டது.
இதுகுறித்து நாடாளுமன்ற லோக்சபாவில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில்அளித்த அன்புமணி, லூத்தர் டெர்ரி விருது கிடைத்தது குறித்து நாடு முழுவதும்மீடியாக்களிள் விளம்பரம் செய்ய ரூ. 60 லட்சம் செலவிடப்பட்டது.
இந்த விருதை ஏதோ ஒரு அமெரிக்க நிறுவனம் வழங்கவில்லை. அமெரிக்கபுற்றுநோய் கழகம் தான் இந்த விருதை வழங்கியது. புகையிலைக் கட்டுப்பாட்டில்,மத்திய சுகாதாரத் துறை மிகச் சிறப்பாக செயல்பட்டதையும், எனது தலைமையையும்பாராட்டும் விதமாகவே இந்த விருது வழங்கப்பட்டது.
இந்த விருதுக்காக இந்திய அரசு விண்ணப்பம் ஏதும் செய்யவில்லை என்றார்அன்புமணி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications