நெடுமாறன் மாநாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து!
சென்னை:
பழ.நெடுமாறன் தலைமையிலான உலகத்தமிழ் பேரவையின் சேலம் மாநாட்டுக்குஅம்மாநகரகாவல் துறை ஆணையர் விதித்த தடை உத்தரவை சென்னைஉயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மாநாட்டுக்கு அனுமதி தருவது குறித்து மீண்டும்பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
உலகத் தமிழ் பேரவையின் சார்பில் சேலம் நகரில் 12, 13 (இன்றும், நாளையும்)மாநாடு நடத்த ஏறபாடு செய்யப்பட்டிருந்து. ஆனால் இந்த மாநாட்டை நடத்த சேலம்போலீஸ் கமிஷனர் அனுமதி தரமறுத்த விட்டார்.இதையடுதது பேரவை சார்பில் அதன் செயலாளர் பத்மநாபன் சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு அவசர மனுவாக கருதப்பட்டுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதுகுறித்த சேலம் போலீஸ் கமிஷனர்விளக்கம் அளிக்க நீதிபதி ரவிராஜ பாண்டியன் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில்நேற்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில்ஆஜராகி ராஜா கலிபுல்லா வாதிடுகையில், மாநாட்டில் கலந்துகொள்ள வருவோரில்பெரும்பாலானோர் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தின்ஆதரவாளர்கள். மாநாட்டில் கலந்து கொள்ளும் போர்வையில் விடுதலைப்புலிகள்ஊடுறுவும் ஆபத்து உள்ளது என்றார்.
பின்னர் பத்மநாபன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் காந்தி, இந்த அரசுதமிழர்களுக்கும், தமிழர் நலன்களுக்கும் ஆதரவான அரசாக இருக்கும் என்றுநம்பினோம். இதை நம்பித்தான் மாநாடு நடத்த முடிவு செய்து, அனுமதி கோரிவிண்ணப்பித்தோம்.
விடுதலைப் புலிகளைஆதரித்து யாரும் பேச அனுமதிக்க மாட்டோம். அப்படிப்பேசினால் போலீஸார் அவர்களை கைது செய்யலாம் என்றும், பாஸ் போர்ட்டுகளைபறிமுதல் செய்யலாம் என்றும் காந்தி தெரிவித்தார்.
இதையடுத்து, சேலம் கமிஷனர் விதித்த தடை உத்தரவை ரத்து செய்து நீதிபதிஉத்தரவிட்டார்.மேலும், மீண்டும் அனுமதி தருவது குறித்து பரிசீலிக்க வேண்டும்எனறும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications