கருணாநிதியுடன் மே.வங்க முதல்வர் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் மேற்குவங்கமுதல்வர் புத்ததேவ்பட்டச்சார்யா சந்தித்துப் பேசினார்.
சென்னை வந்துள்ள பட்டச்சார்யா இன்று காலை கோபாலபுரத்தில் உள்ள முதல்வர்கருணாநிதியின் இல்லத்திற்குச் சென்று அவரை சந்தித்துப் பேசினார். அப்போதுமத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், ராசா ஆகியோர் உடனிருந்தனர்.பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பட்டாச்சார்யா, தமிழக அரசின் ஏழைவிவசாயிகளுக்கு தலா 2 ஏக்கர் நிலத் திட்டம் அருமையானது. இதற்காககருணாநிதியிடம் பாராட்டுக்களைத் தெரிவித்தேன்.தரிசு நில மேம்பாடு தொடர்பாக மேற்கு வங்க மாநில அரசு மேற்கொண்ட திட்டத்தைஅவரிடம் எடுத்துரைத்தேன்.
இதுதொடர்பாக தமிழக அதிகாரிகளுக்கு மேற்குவங்க அரசு உதவும்.கடலோரங்களில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள மத்திய சுற்றுச்சூழல்அமைச்சகம் விதித்துள்ள தடையை நீக்க உதவ வேண்டும் என்றும் கருணாநிதியிடம்எடுத்துரைத்தேன் என்றார் பட்டச்சார்யா.












Click it and Unblock the Notifications