தொடங்கியது உலகத் தமிழர் பேரமைப்பு மாநாடு!
சேலம்:
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து திட்டமிட்டபடி உலகத் தமிழர்பேரமைப்பின் 4வது ஆண்டு நிறைவு மாநாடு சேலம் நகரில் நேற்று காலைதொடங்கியது.
பழ. நெடுமாறன் தலைமையிலான உலகத் தமிழர் பேரமைப்பின் 4 வது ஆண்டுநிறைவையொட்டி சேலத்தில் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டு ஏற்பாடுகள்செய்யப்பட்டன. ஆனால் திடீரென சேலம் மாநகர காவல்துறை மாநாட்டுக்கு அனுமதிதர மறுத்தது.இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தை தமிழர்பேரமைப்பு அணுகியது. இந்தமனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், சேலம் மாநகர காவல்துறை ஆணையர் பிறப்பித்தஉத்தரவை ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து நேற்று காலை திட்டமிட்டபடி மாநாடுதொடங்கியது.
அழகாபுரம் ரத்தினவேல் கவுண்டர் திருமண மண்டபத்தில் தொடங்கிய மாநாட்டில்அர்த்தனாரி கொடியேற்றினார். மு.பாலசுப்ரமணியம் வரவேற்புரை நிகழ்த்தினார்.சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன் தொடக்க உரைநிகழ்த்தினார்.
மாநாட்டு சிறப்பு மலரை தமிழறிஞர் மணவை முஸ்தபா வெளியிட, சந்திரேசன்,ஷாகுல் அமீது, பரந்தாமன் ஆகியோர்பெற்றுக் கொண்டனர். க.ப. அறவாணன்பேசுகையில், கடலின் நடுவில் ஏற்படுகின்ற சிறு சுழிதானி பெரிய அலையாகமாறுகிறது. அதேபோல சேலத்தில் இன்று நடைபெறும் இந்த சிறுசுழி, பெரியபுயலாகமாறும்.
ஐரோப்பியர்கள் யாரிடம் அடிமைப்பட்டுக் கிடக்க வில்லை. அடிமையாக இருக்கஅவர்கள் விரும்பியதும் இல்லை. அவர்களைப் போல தமிழர்களும் வாழ வேண்டும்.
தமிழ் இலக்கியம், உலக இலக்கியங்களுக்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை. இன்றுதமிழனின் நிலை எப்படி உள்ளது? கூலி, அடிமை, அகதி என்ற மூன்று நிலையில்தான் தமிழன் இருக்கிறான். இந்த அவல நிலை மாற வேண்டும் என்றார் அறவாணன்.
பழ. நெடுமாறன் பேசுகையில், திருமண மண்டபத்தைக் கொடுக்க நள்ளிரவு 1 மணிவரையிலும் கெடுபிடி செய்தார்கள். உயர்நீதிமன்றம் அனுமதிஅளித்தும்,அதிகாரவர்க்கம் அனுமதி தரமறுத்தது. அவர்க்ளை ஆட்சியாளர்கள் தான் தட்டி வைக்கவேண்டும்.
இன்று பல தமிழர்அமைப்புகள், உலகத் தமிழர் பேரமைப்பில் இணைந்துள்ளன.இதற்கென்று உறுப்பினர்கள் கிடையாது. அவரவர்க்கு கொள்கை, கோட்பாடு,செயல்திட்டம் உள்ளது. அதில் உலகத் தமிழர் பேரமைப்பு தலையிடாது.
உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள்வந்துள்ளனர். அனைவரும் ஒன்று சேர்ந்து பல்வேறு பகதிகளில் வாழும் தமிழ்களின்பிரச்சினை குறித்தும், அதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறிததும் இந்த மாநாட்டில்விவாதிக்கப்படவுள்ளது என்றார்.
தொடர்ந்து தமிழ் அமைப்புகளின் பேராளர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல்நடந்தது. பின்னர் மாலையில் உலகத் தமிழராய் இணைவோம் என்ற தலைப்பில்கவியரங்கம் நடந்தது. இசை நிகழ்ச்சிகளும் நடந்தன. பின்னர் அனைத்து மாநிலதமிழர் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கிற்கு இந்தியா-இலங்கை தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின்தலைவர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். அனைத்து கேரள தமிழ் பேரவைத்தலைவர் முத்துராமன் தொடக்க உரையாற்றினார். இரவில் தமிழறிஞர் வாழ்த்தரங்கம்நடைபெற்றது.
மாநிாட்டையொட்டி 300க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.இவர்கள் அனைவரும ஒட்டமொத்தமாக கல்யாண மண்டபத்திற்கு உள்ளேநின்றிரந்தனர். இதைப் பார்த்த மாநாட்டு அமைப்பாளர்கள், போலீஸார் உடனடியாகமண்டபத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றனர். இதையடுத்து போலீஸார்வெளியே சென்றுவிட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications