ஜெயக்குமார் போய் செங்கோட்டையன் வந்தார்
சென்னை:
அதிமுக தலைமை நிலையச் செயலாளராக இருந்து வந்த முன்னாள் அமைச்சர்ஜெயக்குமார் மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக இன்னொரு முன்னாள்அமைச்சரான செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆட்சியில் இருக்கும்போது அமைச்சர்களை மாற்றுவதும் ஆட்சியில் இல்லாதபோதுகட்சி நிர்வாகிகளை மாற்றுவதும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்குவழக்கம்.அந்த வகையில் சட்டமன்ற தேர்தலுக்குபின் அதிமுக நிர்வாகிகள் பல முறைமாற்றப்பட்டுவிட்டனர். இப்போது மீண்டும் நிர்வாகிகள் மாற்றம்செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் இருக்கும் டி.ஜெயக்குமார்எம்எல்ஏ, அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் கே.ஏ.செங்கோட்டையன்எம்எல்ஏ, வரகூர் அருணாசலம், ஆர்.சரோஜா, எஸ்என்.ராஜேந்திரன், விஜயலட்சுமிபழனிச்சாமி, அதிமுக மீனவர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருக்கும் கலைமணிஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்துவிடுவிக்கப்பட்டுகிறார்கள்.
தமைமை நிலைய செயலாளர் பொறுப்பில் செங்கோட்டையன், மீனவர் பிரிவுசெயலாளர் பொறுப்பில் டி.ஜெயக்குமார், மீனவர் பிரிவு இணை செயலாளர்பொறுப்பில் கலைமணி ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
மா.செக்கள் நீக்கம்:
விருதுநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் விநாயகமூர்த்தி நீக்கப்பட்டுஅவருக்கு பதில் அருப்புக்கோட்டை முன்னாள் எம்எல்ஏ கேகே.சிவசாமி, விருதுநகர்மாவட்ட செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் சுப.கருப்பையா நீக்கப்பட்டுஅவருக்கு பதில் சோழன் சித்.பழனிச்சாமி மாவட்ட செயலாளராகநியமிக்கப்படுகிறார்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் முருகேசன் நீக்கப்பட்டுஅவருக்குப் பதில் எம்.சுந்தரபாண்டியன் மாவட்ட செயலாளராக நியமிக்ப்படுகிறார்.
மீண்டும் கட்சிக்குள் அனுமதி:
அதிமுகவில் இருந்து நீக்கி வைக்கப்பட்டு இருந்த வேலூர் மேற்கு மாவட்டத்தைசேர்ந்த பள்ளிகொண்டா பேரூராட்சி 13வது வார்டு கவுன்சிலர் ஆர்.நடராஜன், 11வதுவார்டு கவுன்சிலர் ஆர்.ரவிக்குமார், 12வது வார்டு கவுன்சிலர் ஆர்.வேலு, 18வதுவார்டு கவுன்சிலர் எம்.மல்லிகா, மகாலிங்கம் ஆகியோர் தங்களது செயலுக்கு வருந்திநேரிலும், கடிதம் மூலமும் மன்னிப்புக் கோரியதால் அவர்கள் இன்று முதல்உறுப்பினர்களாக கட்சியில் இணைந்து பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதே போல் அதிமுகவில் இருந்து நீக்கி வைக்கப்பட்டு இருந்த கோவை மாநகர்மாவட்டம், கோவை மேற்கு பகுதி 51வது வட்டம் பா.மனோகரன், கே.நாகராஜ்,பி.ரங்கராஜ், எம்.மணி, பி.சாமுவேல், 57வது வட்டம் எஸ்கே.விஜயன் ஆகியோர்தங்களது செயலுக்கு வருந்தி மன்னிப்பு கோரியதால் மீண்டும் கட்சியில் இணைந்துபணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications