பொங்கல் முதல் இலவச கேஸ் இணைப்பு-ஸ்டவ்: கருணாநிதி
சென்னை:
பொங்கல் முதல் தமிழகத்தில் ஏழைக் குடும்பங்களுக்கு இலவச கேஸ் இணைப்பும், இலவச கேஸ் ஸ்டவ்களும்வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி சென்னை புனித ஜார்ஜ கோட்டையில் கருணாநிதி தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார்.காலை 8.20 மணிக்கு கோட்டைக்கு வந்த கருணாநிதிக்கு போலீசார் அணிவகுப்புமரியாதை அளித்தனர். பின்னர் சுதந்திர தின உரையாற்றிய கருணாநிதி பேசுகையில்,
1974ம் ஆண்டு தேசியக் கொடியை ஆகஸ்ட் 15 விடுதலை நாளில் அனைத்து மாநிலமுதல்வர்களும் ஏற்றுவதற்கான உரிமையை முதன்முதலில் பெற்றிட காரணமாகஇருந்தவன் என்ற பெருமிதத்தோடு இன்று 5வது முறையாக உங்கள் முன்னிலையில்மகிழ்ச்சி பொங்க கொடியை ஏற்றி வைத்துள்ளேன்.
கொடி ஏற்றுவது, விடுதலை நாளை கொண்டாடி மகிழ்வது மட்டுமல்ல, நமது நாட்டுகுடிமக்களின் வாழ்வு உயரவும் இந் நாளில் நாம் சூளுரை மேற்கொண்டாக வேண்டும்.
மத்திய அரசுடனும் அண்டை மாநிலங்களுடனும் இணக்கமான நல்லுறவைபேணுவதன் மூலம் தமிழகத்தின் வளர்ச்சி தடைபடாமல் செல்ல வாய்ப்புக்கள்அமையும்.
இந்த 3 மாதத்தில் 7 முறை அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தி மக்கள் பிரச்சனைகளைதீர்ப்பதற்கான திட்டங்கள் மீது முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுத்துவருகிறது எனது அரசு.
முந்தைய ஆட்சி காலத்தில் வறட்சி காரணமாக உயிர் நீத்த விவசாயிகளின்குடும்பங்களுக்கு இன்று சுதந்திர திருநாளில் ரூ. 50,000 நிதியுதவி வழங்கியுள்ளோம்.
ஆட்சிக்கு வந்த 95 நாட்களுக்குள் சோனியா காந்தியையும் பிரதமர் உள்ளிட்ட மத்தியஅமைச்சர்களையும் தோழமைக் கட்சித் தலைவர்களையும் பக்கத்து மாநிலமுதல்வர்களையும் சந்தித்து தமிழக வளர்ச்சிக்காகவும்,
தாழ்த்தப்பட்டோர், பிற்படுதப்பட்டோர், சிறுபான்மையினர் மக்களின்உரிமைகளுக்காகவும் ஒத்துழைப்பையும் உதவிகளையும் கோரிள்ளோம்.
தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டு எஞ்சியுள்ள சிலவாக்குறுதிகளை நிறைவேற்றவும் நாட்களை குறித்து திட்டமிட்டு செயல்பட்டுவருகிறோம்.
ஏழை, எளிய மக்களின் வீடுகளில் மண்ணெண்ணெய், விறகு அடுப்புகளில் சமையல்செய்யும்போது பெண்கள் படும் இன்னல்களைக் களைய அந்தக் குடும்பங்களுக்குஇலவச எரிவாயு இணைப்பும், கேஸ் அடுப்பும் கிடைக்க வகை செய்யப்படும்.
வரும் பொங்கல் முதல் அந்தத் திட்டம் அமலுக்கு வரும். அதற்காக முதல் கட்டமாகரூ. 150 கோடி ஒதுக்கப்படும். இலவச கேஸ் இணைப்புக்கான டெபாசிட் கட்டணத்தைஅரசே வழங்கும். கேஸ் அடுப்பையும் அரசே இலவசமாக வழங்கும்.
மதுரை, திருச்சி, நெல்லை, கோவையில் சாப்ட்வேர் பூங்காங்களைஅமைக்கவுள்ளோம். மகளிர் சுய உதவிக் குழுக்கள் போல இளைஞர்ளுக்கும் உதவகுழுக்கள் உருவாக்கப்படும்.
நமது அரசின் செயல்பாடுளை இந்தியாவே கூர்ந்து கவனித்து வருகிறது. 2 ரூபாய்க்கு1 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை நாடு முழுவதும் வழங்க வேண்டும் என்றகோரிக்கை பல மாநிலங்களிலும் எழுந்துள்ளது.
இது இந்த அரசுக்கும் தமிழகத்துக்கும் கிடைத்துள்ள பெருமை என்றார் கருணாநிதி.
இந் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் தயாநிதி, பாலு, ராசா, உயர் நீதிமன்ற தலைமைநீதிபதி ஏ.பி.ஷா, அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
ஆயிரக்கணக்கான பொது மக்களும் இந்த நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.
முன்னதாக பல்வேறு அரசுத் துறைகளின் கண்கவர் வாகன அணிவகுப்பும் நடந்தது.
தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்துப்பகுதிகளிலும் இன்று பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ம.பொ.சி தபால் தலை:
இந் நிலையில் ம.பொ.சியின் நினைவு தபால் தலையை கருணாநிதி இன்றுவெளியிட்டார்.
மறைந்த சுதந்திரப்போராட்ட வீரரும், சட்டமேலவை முன்னாள் தலைவருமானம.பொ.சி.யின் நூற்றாண்டு விழா சமீபத்தில் கொண்டாடப்பட்ட்து. அப்போதும.பொ.சிக்கு நினைவு தபால்தலை வெளியிடப்படும் என கருணாநிதி கூறியிருந்தார்.அதன்படி அவரது தபால்தலை இன்று வெளியிடப்பட்டது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications