இலங்கையில் சண்டை முற்றுகிறது: சிறுமிகள் பலி-கோபி அன்னான் கவலை
கொழும்பு:
இலங்கையின் வட பகுதியில், ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேசண்டை உக்கிரமடைந்து வருகிறது.
விமானப் படை குண்டு வீசித் தாக்கியதில் 61 தமிழ் மாணவிகள பலியானது,கொழும்பில் நடந்த குண்டுவெடிப்பு ஆகிய சம்பவங்களைத் தொடர்ந்து இலங்கைநிலைமை மேலும் சிக்கலாகியுள்ளது.இன்று வட பகுதியில் அரசு உத்தரவைத் தொடர்ந்து பள்ளிக் கூடங்கள் அனைத்தும்மூடப்பட்டுள்ளன. கொழும்பு நகரில் ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில்இறங்கியுள்ளது.
தற்கொலைப் படையினர் நகருக்குள் ஊடுறுவியிருக்கலாம் என்றசந்தேகத்தின்அடிப்படையில் இந்த தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
இதற்கிடையே, கமலை பகுதியில் நேற்று இரவு முழுவதும் இருதரப்பினருக்கும்இடையே கடும் சண்டை நடந்தது. ராணுவ நிலைகள் மீது விடுதலைப் புலிகள்ராக்கெட்டுகளை வீசியும், பீரங்கிகளாலும் தாக்குதல் நடத்தினர்.
யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து பதட்டமான நிலை உள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள்வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் உள்ளேயேமுடங்கிக் கிடக்கின்றனர்.
தொடர்ந்து அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள்தேவாலயங்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர். தொலைபேசி இணைப்புகள்தொடர்ந்து செயலிழந்து கிடக்கின்றன. உணவுப் பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடுநிலவுகிறது.
இதற்கிடையே கொழும்பு நகரிலும் சிங்களர்கள் அதிகம் வாழும் தெற்குஇலங்கையிலும் தற்கொலைப் படைத் தாக்குதல்கள் நடைபெறக்கூடும் என்ற அச்சம்நிலவுகிறது.
மீண்டும் போர் மூண்டுள்ளதால், இலங்கையில் பங்கு வர்த்தகம் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளது. 2.4 சதவீத அளவுக்கு பங்கு விகிதங்கள் வீழ்ச்சிஅடைந்துள்ளன.
முதல் கிரிக்கெட் போட்டி கைவிடப்பட்டது:
இதற்கிடையே கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இலங்கை வந்துள்ள தென்னாப்பிரிக்கஅணி போட்டித் தொடரிலிருந்து விலகும் முடிவை கைவிட்டுள்ளது.
முத்தரப்புப் போட்டியில் தொடர்ந்து பங்கேற்க அந்த அணியின் முடிவு செய்துள்ளது.
முன்னதாக கொழும்பு குண்டுவெடிப்பைத் தொடர்ந்து முத்தரப்பு கிரிக்கெட்தொடரிலிருந்து விலக தென்னாப்பிரிக்கா முடிவு செய்து சர்வதேச கிரிக்கெட்கவுன்சிலிடம் அனுமதி கோரியது.
இதையடுத்து இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரிகள், தென்னாப்பிரிக்க அணியின்நிர்வாகிகளுடன் இன்று முக்கியப் பேச்சு நடத்தினர். பாதுகாப்பு நடவடிக்கைகள்குறித்து தென்னாப்பிரிக்க அணி நிர்வாகிகளிடம் இலங்கை அதிகாரிகள் விரிவாகவிளக்கினர்.
இதில் திருப்தி அடைந்த தென்னாப்பிரிக்க அணி தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்கமுடிவுசெய்தது. இருப்பினும் இன்று நடைபெறுவதாக இருந்தஇலங்கை-தென்னாப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி தொடர்மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுவிட்டது.
தொடர்ந்து விளையாடப் போவதாக தென்னாப்பிரிக்க அணி முடிவு செய்துள்ளபோதிலும், நிலைமை மோசமடைந்தால், தனது திட்டத்தில் மாறுதல் செய்யக் கூடும்என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே இலங்கை வந்துள்ள இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட்அணிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பு தரப்படும் என இலங்கை அதிபர் ராஜபக்ஷேஉறுதியளித்துள்ளார்.
அகதிகள் வருகை அதிகரிப்பு:
இந் நிலையில் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வரும் அகதிகளின் எண்ணிக்கைமீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 210 அகதிகள்ராமேஸ்வரம் வந்துள்ளனர்.
இலங்கையில் நிலைமை படுமோசமாக உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ராணுவ உதவி: இந்தியா மறுப்பு
இதற்கிடையே விடுதலைப் புலிகளின் கண்ணிவெடிகளை செயலிழக்கச் செய்யும் நவீன வாகனத்தை தருமாறுஇந்தியாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் தற்போதைய பாதுகாப்பு நிலவரத்தை கருத்தில்கொண்டு இலங்கைக்கு ராணுவ தளவாடங்களையும், ஆயதங்களையும் வழங்க இந்தியா மறுத்து விட்டதாகத்தெரிகிறது.
சிறுமிகள் பலி-கோபி அன்னான் கவலை:
இலங்கையில், போர் அதிகரித்து வருவது கவலை தருவதாக ஐ.நா. பாதுச் செயலாளர் கோபி அன்னான்கூறியுள்ளார். உடனடியாக ராணுவம், விடுதலைப் புலிகளும் சண்டையை நிறுத்த வேண்டும் என்றும் அவர்வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையில் ராணுவத்திற்கும், புலிகளுக்கும் இடையிலான சண்டை முற்றி வருகிறது. இதுகுறித்து அன்னான்கவலை வெளியிட்டுள்ளார். இரு தரப்பும் உடனடியாக சண்டையைக் கைவிட்டு விட்டு பேச்சு வார்த்தையைதொடர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அன்னானின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெபானிடு ஜர்ரிக் வெளியிட்டுள்ள அறிக்கையில், போர்மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என அன்னான் உறுதியாக நம்புகிறார். தற்போது நடந்துவரும் போர்,அமைதிக்கு இடையூறாக அமையும் என்று கவலை தெரிவித்துள்ள ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, நார்வே,ஜப்பான் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து எனது கவலையையும் தெரிவிக்க விரும்புகிறேன்.
உடனடியாக இருதரப்பும் சண்டையை நிறுத்த வேண்டும். பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். இந்தசண்டையில் பல அப்பாவி உயிர்கள் பலியாகி வருவது கவலை தருகிறது. கொழும்பு குண்டுவெடிப்பில் 7 பேர்உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். அதேபோல, வடகிழக்கில் ராணுவம் நடத்திய தாக்குதலில் பலபள்ளி மாணவிகள் பலியாகியுள்ளது அதிர்ச்சி தருகிறது.
சர்வதேச கவலைகளுக்கு இருதரப்பும் மதிப்பு அளிக்க வேண்டும். அமைதி முயற்சிகளுக்கு முக்கியத்துவம்கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அன்னான்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications