மெட்ராஸ் டே: நகருக்கு வயது 367
சென்னை:
சென்னை நகரம் உருவான தினம் மெட்ராஸ் டே என்ற பெயரில் வருகிற 20ம் தேதிமுதல் 27ம் தேதி வரை ஒரு வார காலம் கொண்டாடப்படுகிறது.
சென்னை நகரம் 22.08.1639 அன்று உருவானது. இந்த ஆண்டுடன் சென்னை நகரம்தோன்றி 367 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த நாளைநினைவு கூறும் வகையில் மெட்ராஸ் டே கொண்டாடப்பட உள்ளது.இதற்காக வருகிற 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை ஒரு வார காலம் பல்வேறுநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாரம்பரிய நடனம், வினாடி வினா,புகைப்பட போட்டி, சொற்பொழிவு என 30 வகையான நிகழ்ச்சிகளுடன்நடைபெறுவுள்ள இந்திருவிழாவையொட்டி பாரம்பரிய நடைப்பயணமும்இடம்பெறும்.
26ம் தேதி ஜார்ஜ் டவுனிலும், 27ம் தேதி எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்துசென்ரல் ரயில் நிறுத்தம் வரையிலும் நடைப் பயணம் நடக்கிறது. மயிலாப்பூரில்சிறுவர், சிறுமியர்கள் 27ம் தேதி நடைப்பயணம் செல்கிறார்கள்.
பழமையின் பெருமையும், புதுமையின் பொலிவும் கலந்த கலவையாக வீற்றிருக்கும்இந்த சென்னை உருவான கதை உங்களுக்கு தெரியுமா?
கிழக்கிந்திய கம்பெனி ஏஜென்ட்களான பிரான்சிஸ் டேயும், ஆண்டரூ கோகனும்1639ம் ஆண்டு வங்க கடற்கரையில் வந்திறங்கியபோது சென்னை ஒரு சிறிய மீன்பிடி கிராமம். இன்று இது நாட்டின் முக்கிய 4 மாநகரங்களுள் ஒன்றாகவளர்ந்திருக்கிறது.
சென்னையின் வரலாற்றுப்படி மெட்ராஸ் என்ற பெயர் ஆங்கிலேயர் வருவதற்குமுன்பே குறிப்பிடப்பட்டிருப்பது தெரிகிறது. அதன்பிறகு மதராஸ் பட்டிணம் என்றுஅழைக்கப்பட்டது.
1640ம் ஆண்டு ஐயப்ப நாயக் என்பவர் ஆண்டு அனுபவித்து வந்த சென்னையின்ஒரு துண்டு நிலத்தை கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் குத்தகைக்கு பெற்றனர். அந்தஇடத்தில் தான் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது.
இக்கட்டடம் கட்டுவதற்கு செயின்ட் ஜார்ஜ் உதவி செய்ததால் அவரது பெயரேசூட்டப்பட்டது. இதேபோல ஐயப்ப நாயக்கின் தந்தை பெயரான சென்னப்பநாயக்கிற்கு பெருமை சேர்க்கும் வகையில் மதராஸ் பட்டணம், சென்னப்பட்டணம்ஆக்கப்பட்டது.
ஆங்கிலேயர்களால் இதனை உச்சரிக்க முடியாததால் மீண்டும் மதராஸ் என்றேஅழைக்கப்பட்டது. இப்போது சென்னையாக மாறி விட்டது. கோட்டைக்கு அருகில்இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு போன்றவைஅன்று கிராமப் பகுதிகள்.
இந்த கிராமங்களையெல்லாம் ஒன்று சேர்த்த பின்னர் உருவானதுதான் சென்னைபட்டணம். மொழிவாரி மாநிலங்கள் உருவான போது தமிழ்நாட்டின் தலைநகரானதுசென்னை.
ஒரு காலத்தில் சென்னைக்கு சிறப்பை பெற்றுத் தந்த அடையார் ஆறு, கூவம் ஆறு,பக்கிம்காம் கால்வாய் ஆகியவை இன்று சாக்கடை ஆறாக ஓடுகிறது. அன்றுகுடிக்கவும், குளிக்கவும் பயன்பட்டு வந்த தண்ணீர் இன்று பக்கத்தில் சென்றாலேமூக்கைப் பொத்தும் அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது.












Click it and Unblock the Notifications